top of page

20+ குர்‍ஆன்கள் உண்டா? குர்‍ஆன் கிராத்துக்களை எங்கே வாங்கலாம்?



இந்த சிறிய கட்டுரையில் “மூல அரபி குர்‍ஆன் கிராத்துகள்” பற்றிய  விவரங்களை ஐந்து கேள்விகளாக காண்போம். 

கேள்விகள்:

  1. உலகம் முழுவதும் ஒரே மூல அரபி குர்‍ஆன் உள்ளது என்கிறார்களே, இது உண்மையா?

  2. ஹ‌ஃப்ஸ் குர்‍ஆன் மற்றும் வர்ஷ் குர்‍ஆன் என்றால் என்ன?

  3. ஹஃப்ஸ் மற்றும் வர்ஷ் என்ற இரண்டு மூல அரபி குர்‍ஆன்கள் மட்டும் தான் உலகில் உள்ளன என்று நாம் கருதலாமா?

  4. இந்த 20+ வகையான குர்‍ஆன்கள் வெறும் ஒலியாக இருக்கிறது, எழுத்தில் அதாவது பேப்பரில் அச்சில் (Print) செய்து புத்தகமாக இல்லையல்லவா?

  5. ஒரு முஸ்லிமுக்கு 10 கிராத்களும் தேவையென்றால், அவர் அனைத்து குர்‍ஆன்களையும் வாங்கவேண்டுமா?

 

கேள்வி 1: உலகம் முழுவதும் ஒரே மூல அரபி குர்‍ஆன் உள்ளது என்கிறார்களே, இது உண்மையா?


பதில் 1: இது ஒரு மிகப்பெரிய பொய்யாகும். உலக நாடுகள் அனைத்திலும் உள்ள முஸ்லிம்கள் ஒரே மூல குர்‍ஆனை ஓதுகிறார்கள் என்ற பொய்யை முஸ்லிம் அறிஞர்கள் உரக்கச் சொல்கிறார்கள். இது உண்மை என்று நாமும் நம்பிவிடுகிறோம்.


உண்மையைச் சொல்வதானால், அரபி மூலத்தில் 20க்கும் அதிகமான குர்‍ஆன்கள் உள்ளன.


இந்திய அல்லது தமிழ் முஸ்லிம்களின் அறியாமைக்கு இன்னொரு உதாரணம் என்னவென்றால், பல்லாண்டு காலமாக‌ தாங்கள் அரபியில் ஓதிக்கொண்டு  இருக்கும் குர்‍ஆன் “ஹஃப்ஸ் கிராத்” குர்‍ஆனா? அல்லது “வர்ஷ” கிராத் குர்‍ஆனா? என்ற விவரம் கூட தெரியவில்லை என்பதாகும்..


கேள்வி 2: ஹ‌ஃப்ஸ் குர்‍ஆன் மற்றும் வர்ஷ் குர்‍ஆன் என்றால் என்ன?


பதில் 2: இன்று உலகில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஓதும் குர்‍ஆன் என்பது “ஹஃப்ஸ்  (Hafs)” கிராத்தில் உள்ள குர்‍ஆன் ஆகும்.


“கிராத்” என்றால் ஓதுதல் என்று பொருள். ஆக, ஹஃப்ஸ் என்ற இஸ்லாமிய அறிஞர் எப்படி குர்‍ஆனை ஓதினாரோ, அதன் அடிப்படையில் உள்ள குர்‍ஆன் தான் 'ஹஃப்ஸ் குர்‍ஆன்' ஆகும். உங்கள் வீட்டில் ஒரு குர்‍ஆன் இருந்து, அதை நீங்கள் அரபியில் ஓதினால், அது பெரும்பான்மையாக ஹஃப்ஸ் கிராத் குர்‍ஆனாகவே இருக்கும்.


இதே போன்று வர்ஷ் (Warsh) கிராத் குர்‍ஆனும் உள்ளது. அதாவது வர்ஷ் என்ற இஸ்லாமிய அறிஞர் எப்படி குர்‍ஆனை ஓதினாரோ, அதன் அடிப்படையில் உள்ள குர்‍ஆன் தான் “வர்ஷ் கிராத் குர்‍ஆன்” ஆகும்.


கேள்வி 3: ஹஃப்ஸ் மற்றும் வர்ஷ் என்ற இரண்டு மூல அரபி குர்‍ஆன்கள் மட்டும் தான் உலகில் உள்ளன என்று நாம் கருதலாமா?


பதில் 3: இல்லை, நாம் பார்த்த இரண்டு வகையான குர்‍ஆன்கள், இமாம் ஹஃப்ஸ் மற்றும் இமாம் வர்ஷ் என்பவர்கள் மூலமாக கிடைத்தவைகளாகும். இவர்களைப் போன்று அனேகர் இன்னும் இருக்கிறார்கள்.  


இஸ்லாமிய அறிஞர்கள், இப்படிப்பட்ட “பல குர்‍ஆன் ஓதுபவர்களை” பட்டியலிட்டுள்ளார்கள். 


இவர்களில் 10 பேரை முஸ்லிம் அறிஞர்கள் முக்கியமானவர்களாக குறிப்பிடுகிறார்கள். இந்த 10 பேரிலிருந்து, 7 பேரை இன்னும் முக்கியப்படுத்தி தெரிவு செய்துள்ளார்கள். இந்த ஏழு ஓதுதலை அல்கிராத் அஸ்ஸப் (al-qira'at as-sab – The Seven Readings) என்று கூறுவார்கள். 


மேற்கண்ட 10 பேரிடம் பல மாணவர்கள் குர்‍ஆன் ஓதுதலை கற்றுக்கொண்டு, “அதனை தங்கள் சுய ஓதுதலின்படி” எழுத்து வடியில் அடுத்த சந்ததியினருக்கு சேர்த்துள்ளார்கள். இந்த மாணவர்களில் இரண்டு பேருடைய  ஓதுதல் முறையை (கிராத்) முஸ்லிம்கள் அங்கீகரித்துள்ளார்கள். ஆக, 10 ஆசிரியர்கள், ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்து கற்ற இரண்டு மாணவர்கள், மொத்தம் 10 x 2 = 20 குர்‍ஆன்கள் குறைந்தபட்சம் இன்று நம்மிடம் உள்ளன.


குர்‍ஆனை கற்றுக்கொடுத்த ஆசிரியரை “The Reader(ஓதுபவர்)” என்றும், அவரிடமிருந்து கற்று அடுத்த சந்ததிக்கு சேர்ந்த நபரை “The Transmitter (நம்மிடம் சேர்த்தவர்கள்)” என்றும் ஆங்கிலத்தில் கூறுவார்கள்.


கீழே தரப்பட்டுள்ள பட்டியலில், பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓதுபவர்கள் (Readers) மற்றும் அவர்களது Transmistters மற்றும் அவைகள் தற்போது எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.


ஆக, 20க்கும் அதிகமான அரபி மூல குர்‍ஆன்கள் உள்ளன.

கேள்வி 4: இந்த 20+ வகையான குர்‍ஆன்கள் வெறும் ஒலியாக இருக்கிறது, எழுத்தில் அதாவது பேப்பரில் அச்சில் (Print) செய்து புத்தகமாக இல்லையல்லவா?

பதில் 4: இந்த 20+ குர்‍ஆன்களை இன்றும் முஸ்லிம்கள் ஓதுகிறார்கள் மேலும் இவைகளின் பிரிண்ட் பிரதியை கூட நாம் புத்தக வடியில் இன்றும் வாங்கலாம்.

குர்‍ஆன்களை ஆன்லையின் விற்கின்ற இரண்டு தளங்களை உங்களுக்கு இங்கு அறிமுகம் செய்கிறேன்.

  1. ஈஸி குர்‍ஆன் ஸ்டோர் – www.easyquranstore.com

  2. தர் அல் ஃபிகர் – www.daralfiker.com

இரண்டு தளங்களை இன்று (30 மே 2020) பார்க்கப்பட்டு, கீழ்கண்ட படங்கள் எடுக்கப்பட்டன.

a) வர்ஷ், கலூன், கலஃப், அல்துரி, அல் கிசய், இபின் அமிர், இபின் கதிர் மற்றும் 10 கிராத்கள் ஒரே புத்தகத்தில்

“ஈஸி குர்‍ஆன் ஸ்டோர்” தளத்தில் “நரேஷன்” என்ற மெனுவில் அவர்கள் பல வகையான கிராத் குர்‍ஆன்கள் பற்றி சிறப்பு அறிவிப்பை கொடுத்துள்ளார்கள். அந்த தொடுப்புக்களை சொடுக்கி, அப்புத்தகங்களை நாம் வாங்கலாம். வலப்பக்கம் மேலே உள்ள மெனுவில், இந்திய ரூபாவை தெரிவு செய்தால், நம் கரன்சியில் நாம் விலையை பார்க்கமுடியும்.

b) பலவகையான கிராத் குர்‍ஆன்களை வாங்க‌:

பலவகையான கிராத் குர்‍ஆன்களை வாங்க‌, தேவைப்படும் தொடுப்புக்களை சொடுக்கினால், கிழ்கண்ட படங்கள் இந்திய விலையுடன் தெரியும்.

c) தர் அல் ஃபிகர் தளத்தில் விற்கப்படும் கிராத் குர்‍ஆன்கள்:

இந்த தளத்தில் பல பக்கங்களில் குர்‍ஆன் கிராத்கள் உள்ளன, நான் சில‌ பக்கங்களை மட்டுமே கொடுத்துள்ளேன்.

எனவே, உலக முஸ்லிம்கள் இந்த கிராத் குர்‍ஆன்களை வாங்கி வாசிக்கிறார்கள்.

கேள்வி 5: ஒரு முஸ்லிமுக்கு 10 கிராத்களும் தேவையென்றால், அவர் அனைத்து குர்‍ஆன்களையும் வாங்கவேண்டுமா?

பதில் 5: ஒருவர் இந்த 10 குர்‍ஆன்களையும் வாங்கியும் படிக்கலாம், ஆனால், இதே மேலேயுள்ள தளத்தில் '10 கிராத்துகளும் ஒரே குர்‍ஆனில் செர்த்து கொடுத்துள்ளார்கள்', இந்த ஒரு புத்தகத்தை வாங்கினால் போதும், அனைத்து கிராத்துகளில் உள்ள வித்தியாசங்களை பார்த்து படித்துக் கொள்ளலாம்.

இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டால், அது ஹஃப்ஸ் கிராத்தில் எப்படி இருக்கும், வர்ஷ் கிராத்தில் எப்படி இருக்கும் என்று 10 வகையான கிராத்தில் மார்ஜின் பக்கத்தில் கொடுத்திருப்பார்கள்.

இந்த புத்தகத்தையும் ஈஸி குர்‍ஆன் ஸ்டோர் தளத்தில் வாங்கமுடியும், கிட்டத்தட்ட ரூபாய் 4000 விலை கொடுத்து வாங்கவேண்டும் (தேதி 1 ஜூன் 2020யின் படி).

 தேதி: 2nd Jun 2020

 
1 view0 comments

Comments


bottom of page