2018 ரமளான் – 3: பர்னபா சுவிசேஷம் – யாரால், எப்போது எழுதப்பட்டது?
முஸ்லிம்களின் படி, பர்னபா என்பவர் இயேசுவின் சீடர் ஆவார், அவர் கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இந்த சுவிசேஷத்தை எழுதினார். ஆனால், உண்மையில் இந்த சுவிசேஷத்தை பர்னபா என்பவர் எழுதவில்லை. பர்னபா சுவிசேஷம் பற்றி முஸ்லிம்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை தவறானதாகும். இது ஒரு மோசடியான ஆவணமாகும். கிறிஸ்தவத்துக்கு எதிரான கருத்துக்கள் இப்புத்தகத்தில் இருப்பதினால், நான் இப்படி கூறுகிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம். குர்-ஆனின் அடிப்படை கோட்பாடுகளை விழுங்கி ஏப்பமிடும் விவரங்கள் பர்னபா சுவிசேஷத்தில் உள்ளது. இதனை முஸ்லிம்கள் ஆதரித்தால், அவர்கள் அல்லாஹ்வை அவமானப்படுத்தி, முஹம்மதுவை கள்ள நபியாக சித்தரிக்கிறார்கள் என்று அர்த்தமாகும். ஓட்டுப்போடச் சென்று, தான் ஆதரிக்கும் வேட்பாளரின் சின்னத்தில் முத்திரையிட்டு, அந்த ஓட்டுச் சீட்டை அப்படியே வீட்டுக்கு பத்திரமாக கொண்டு வந்த நபரின் கதி தான், பர்னபா சுவிசேஷத்தை ஆதரிக்கும் முஸ்லிமின் நிலை (இப்போது ஓட்டு போடும் இயந்திரங்கள் உள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது).
பர்னபாவின் பெயரை ஏந்திய இந்த புத்தகம் கிறிஸ்துவிற்கு 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு, முஹம்மதுவிற்கு 7 நூற்றாண்டுகளுக்கு பிறகு ஒரு மோசடி முஸ்லிமினால் எழுதப்பட்டதாகும் அல்லது ஒரு முஸ்லிமினால் ‘மோசடி’ செய்வதற்காகவே எழுதப்பட்டதாகும். இஸ்லாமிய கோட்பாடுகளை ஆதரிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடும், கிறிஸ்தவத்தை எதிர்க்கவேண்டும் என்ற தீய நோக்கத்தோடும் எழுதப்பட்ட புத்தகமாகும். இதன் சரித்திரம் பற்றி இவ்வளவு உறுதியாக எப்படி உங்களால் சொல்லமுடியும்? என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம், இது நியாயமான கேள்வி தான். ஆனால், ஓரளவிற்கு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய அறிவுடைய எந்த ஒரு நபரானாலும் சரி, அவர் இப்புத்தகத்தை படித்தால், அவருக்கு பளிச்சென்று உண்மை தெரியும். மேலும், இப்புத்தகத்தின் அக மற்றும் புற ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தால், பர்னபா சுவிசேஷம் எப்படி இஸ்லாமுக்கு கல்லறையை தோண்டுகிறது என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். அவைகளை இந்த தொடர் கட்டுரையில் சுருக்கமாக காண்போம்.புத்தகம்:பர்னபா சுவிசேஷம் (The Gospel of Barnabas)ஆசிரியர்:ஆசிரியரின் உண்மைப் பெயர் யாருக்கும் தெரியாது. 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரால் இது எழுதப்பட்டிருக்கவேண்டும். அவர் ஒரு முஸ்லிமாக இருந்திருக்கவேண்டும். இந்த புத்தகத்தின் படி பர்னபா என்பது ஆசிரியரின் பெயர். ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பர்னபா இவர் அல்ல.மூலம்:இலத்தீன் மற்றும் ஸ்பானிஸ் மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. ஸ்பானிஸ் மொழியில் முழு புத்தகம் கிடைக்கவில்லை, வெறும் சில துண்டு கையெழுத்துப்பிரதிகள் அதுவும் 18வது நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகளிலிருந்து கிடைத்துள்ளன. இலத்தீன் மொழியில் முழு புத்தகம் கிடைத்துள்ளது.எழுதிய காலம்:ஆசிரியர் இதனை 14ம் நூற்றாண்டில் எழுதியிருக்கவேண்டும், ஆனால் நமக்கு கிடைத்துள்ள கையெழுத்துப் பிரதிகள் 15/16ம் நூற்றாண்டுகளுக்கு சம்மந்தப்பட்டவையாகும்.http://en.wikipedia.org/wiki/Gospel_of_Barnabas மொழியாக்கம்:
இலத்தின் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் இப்புத்தகத்தை ராக் லண்ட்ஸ்டேல் மற்றும் ராக் லாரா மரியா என்பவர்கள் 1907ம் ஆண்டு மொழியாக்கம் செய்தார்கள்.
Ragg, Lonsdale, 1866-1945
Ragg, Laura Marie (Roberts)
அட்டவணை 1: பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் மற்றும் எழுதிய காலம்.
இந்த பர்னபா சுவிசேஷம் என்பது 14/15ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஒரு மோசடி ஆவணம் என்பதை அங்கீகரிக்கும் இஸ்லாமிய கலைக்களைஞ்சியம்:
The Concise Encyclopedia of Islam:
As regards the “Gospel of Barnabas” itself, there is no question that it is a medieval forgery … It contains anachronisms which can date only from the Middle Ages and not before, and shows a garbled comprehension of Islamic doctrines, calling the Prophet the “Messiah”, which Islam does not claim for him. Besides it farcical notion of sacred history, stylistically it is a mediocre parody of the Gospels, as the writings of Baha Allah are of the Koran.
(Cyril Glassé, The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989, p. 65)
இப்புத்தகம் முதல் நூற்றாண்டில் எழுதப்படவில்லை என்பதற்கும், இது 14ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதற்கும் அனேக சான்றுகள் இதில் காணப்படுகின்றன. அடுத்தடுத்த தொடர்களில் அச்சான்றுகளைக் காண்போம்.
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
Comments