top of page

2020 ரமலான் சிந்தனைகள் – 1





இந்த ரமலான் மாதத்தில் உலகமெங்கிலும் வாழ்கிற முஸ்லீம்களுக்காகவும், அவர்களின் சமாதானம் மற்றும் சுகவாழ்வு கிறிஸ்துவுக்குள் துளிர்க்க வேண்டும் என்று ஜெபிக்கிற கிறிஸ்தவர்கள் சிந்தனைக்கு ஒரு சம்பவம்.


தேவ மனிதர் ரவி சகரியாஸ் அவர்கள் எருசலேம் நகரில் இஸ்லாமிய இயக்கமான  ஹமாஸ் அமைப்பின் ஒரு முக்கியமான தலைவருடனான சந்திப்பின் போது, அவரைப் பார்த்து சொன்னது: 5000 ஆண்டுகளுக்கு முன் ஆபிரகாம் தன் மகனை பலியிடச் சென்ற போது, ஆபிரகாம் தன் மகனை பலியிடுவதற்குச் சில விநாடிகளுக்கு முன் அவனை தடுத்து நிறுத்தி, உன் மகனைக் கொல்ல வேண்டாம், நான் தருவேன் என்று சொன்னார். நாம் அமர்ந்து இருக்கிற இந்த இடத்துக்கு மிக அருகாமையில், 2000 வருடங்களுக்கு முன்பாக, தேவன் அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். தேவன் தம் மகனை பலியாக ஒப்புக் கொடுத்தார். இம்முறை அவர் பலியை தடுத்து நிறுத்தவில்லை. ஷேக் அவர்களே, இனிமேல் நான் உங்களை பார்ப்பேனா என்று எனக்குத் தெரியாது. நான் உங்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்: நமக்காக பலியாகும்படி தேவன் அருளின மகனை நாம் ஏற்றுக் கொள்கிற வரைக்கும், நாம் நிலம், அதிகாரம் மற்றும் பெருமைக்காக நம் பிள்ளைகளை யுத்தக்களத்தில் பலிகொடுத்துக் கொண்டிருப்போம்.


இயேசுவை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொள்கிற முஸ்லீம்கள், இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் தெய்வீகத்தை ஏற்றுக் கொள்ள தடையாக இருப்பது என்ன? அதில் நம் பங்கு என்ன என்றும் சிந்திப்போம்.

-அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 24th April 2020


 


0 views0 comments

Comments


bottom of page