top of page

வாட்ஸப் வலி: தீபாவளி பட்டாசுகளில் குர்‍ஆன் வசன‌ தாள்கள் பயன்படுத்துகிறார்கள், இது கண்டிக்கத்தக்கது!

கடந்த ஆண்டு தீபாவளி நாட்களில் வாட்ஸப்பில் ஒரு படத்தை ஒரு நண்பர் அனுப்பினார், அதைப் பற்றி கேள்வி கேட்டார். நான் ஒன்றும் பதில் அளிக்கவில்லை. இந்த ஆண்டும், இந்த வாரமும் வாட்ஸப் குரூப்பில், வேறு ஒரு படத்தை அனுப்பினார்கள். அதில் 'தீபாவளி பட்டாசுகளில் குர்‍ஆன் தாள்கள் சுற்றப்பட்டு, அவைகள் வெடிக்கும் போது, குர்‍ஆன் வசன தாள்கள் கிழிக்கப்பட்டு, வசனங்கள் தெரிவதாக‌ ஒரு படத்தை' அனுப்பியிருந்தார்கள். குர்‍ஆன் வசனங்கள் உள்ள தாள்களை இப்படி வெடிகளில் சுற்றி வெடிக்கச் செய்வது, கண்டிக்கத்தக்கது என்று சொல்லப்பட்டு இருந்தது.



இதைப் பற்றி இணையத்தில் தேடும் போது, கீழ்கண்ட செய்தியும் கண்களில் பட்டது:


Three Jammu towns tense over claims of Diwali crackers being packed with Koran pages

Muslims in Bhaderwah town and its surrounding areas observed bandh after some people claimed to have found half-burnt pieces of papers having Arabic language written on them.


இதைக் குறித்து சில வரிகளை எழுதலாம் என்று நினைத்து, இச்சிறிய கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இவ்விவரங்கள் குர்‍ஆனுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமல்ல, பைபிளுகும் கிறிஸ்தவர்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்.


1) பிரிண்டிங் வந்த பிறகு பரிசுத்தம் சென்றுவிட்டது:


600 ஆண்டுகளுக்கு முன்பு ஜான் கூடன் பர்க் பிரிண்டிங் இயந்திரம் கண்டுபிடிக்கும் முன்பு வரை, புத்தகங்கள், வேதவசனங்கள் அனைத்தும், விலையுயர்ந்த தோல்களில் எழுதப்பட்டுக்கொண்டு இருந்தன. இதனால் ஒரு சிலரிடம் மட்டுமே அவைகள் காணப்பட்டன. ஆனால், பிரிண்டிங் இயந்திரங்கள் வந்த பிறகு, அறிவு விபரீதமாக வளர்ந்துவிட்டது, காரணம் கோடிக்கணக்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன, மலிவான விலையில் விற்கப்பட்டன.


எனவே, இப்போது நாம் எங்கேயாவது, 'இப்படி குர்‍ஆன்/பைபிள் வசன தாள்கள் கிழிக்கப்பட்டு, எரிக்கப்பட்டு இருக்கும்' படங்களை பார்க்கும் போது நாம் கோபம் கொள்ளவேண்டிய அவசியமில்லை. இன்றும் நான் சாலைகளில் செல்லும் போது, சில நேரங்களில் பைபிளின் சில தாள்கள் சாலைகளில் கிழிக்கப்பட்டு இருப்பதை பார்க்கமுடிகிறது.


2) வேண்டுமென்றே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்


ஒரு பிரிவினரை கோபப்படுத்தவேண்டுமென்றோ, அல்லது அவர்கள் இவர்களை கோபப்படுத்தினார்கள் என்பதால், மற்றவர்களின் புனித நூல்களை கிழித்து, மற்றும் எரித்து, அவைகளை படங்களாக வீடியோக்களாக வெளியிடுகிறவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள் ஆவார்கள். இவர்களின் செயல்களை எற்றுக்கொள்ளமுடியாது.


3) நடைமுறையில் தடுக்கமுடியாத 'விபரீதமான செயல்கள்'


சில நேரங்களில் சில தொழிற்சாலைகளில், உதாரணத்திற்கு, பட்டாசு தொழிற்சாலைகளில், பல ஆயிர கிலோ கணக்கில் காகிதங்களை வாங்கி அவர்கள் பயன்படுத்துவார்கள். இப்படிப்பட்ட நேரங்களில், அவர்கள் "அந்த காகிதங்களில் குர்‍ஆன் தாள்கள் இருக்கின்றனவா? பைபிள் வசனங்கள் இருக்கின்றனவா? பகவத் கீதை வசனங்கள் அல்லது ஸ்லோகங்கள் இருக்கின்றனவா? என்று பார்த்து, அவைகளை நீக்கிவிட்டு தொடரமுடியாது. இது நடைமுறை சாத்தியமற்றது. இதற்காக பட்டாசு தொழிற்சாலைகள் மீது குற்றம் சுமத்தமுடியாது.


4) குர்‍ஆனை புத்தகங்களாக பிரிண்ட் செய்யாமல் இருக்கமுடியுமா?


ஒருவேளை முஸ்லிம்கள் "இல்லை, இந்த விவரங்களை நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம், பட்டாசு தொழிற்சாலைகளில், குர்‍ஆன் தாள்களை பயன்படுத்தக்கூடாது, இதனை நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம், இதனை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று சொல்வார்களானால், நான் சில ஆலோசனைகளை இங்கு தருகிறேன், அதனை நீங்கள் பின்பற்றினால், இந்த பிரச்சனை வராது.


முஸ்லிம்களுக்கு சில ஆலோசனைகள்:

  1. முதலாவதாக, முஸ்லிம்கள் இனி 'குர்‍ஆனை காகிதங்களில் அச்சு அடிக்கக்கூடாது'. முஸ்லிம்கள் தோல் சுருல்களில் இன்னும் இதர விலையுயர்ந்த பொருட்கள் மீது, குர்‍ஆனை பிரிண்ட் செய்துக்கொள்ளட்டும்.

  2. இப்படி செய்தால், குர்‍ஆன் புத்தகமாக பிரிண்ட் ஆகாது, பட்டாசுக்களில் அவைகளை சுற்றும் பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

  3. இதுவரை பிரிண்ட் செய்யப்பட்ட குர்‍ஆனைகளை சேகரித்து, பரிமுதல் செய்துவிடுங்கள்.

  4. பல பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, பட்டாசு தொழிற்சாலைக்கு அனுப்பி, அவர்களின் காகிதங்களை ஆய்வு செய்து, அவைகளில் 'குர்‍ஆன் வசன தாள்களை தேடிக்கண்டுபிடித்து, எடுத்துவிடுங்கள்' அவர்களுக்கு தேவையான நஷ்ட ஈட்டை கொடுத்துவிடுங்கள்.

  5. பெரும்பான்மையான இந்தியர்களுக்கு, அரபி எழுத்துக்கள் எவையென்று தெரியாது, அவைகளில் குர்‍ஆன் வசனங்கள் எவை என்று கண்டுபிடிக்கவும் தெரியாது. எனவே, முஸ்லிம்கள் ஒரு இயக்கத்தை தொடங்கி, இந்தியர்கள் அனைவருக்கும் (முடிந்த அளவு) அரபியையும், குர்‍ஆன் வசனங்களை கண்டுபிடிக்கும் யுக்திகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும்.

  6. மேலும், யாராவது அரபி குர்‍ஆன் தாள்களை கண்டுபிடித்தால், அவைகள் எரிந்த/கிழிந்த நிலையில் இருந்தாலும் சரி, அவைகளை கொண்டுவந்து முஸ்லிம்களிடம் கொடுத்தால், அவர்களுக்கு பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்தால், இது இப்படிப்பட்ட பிரச்சனையை தீர்க்க ஓரளவிற்கு உதவலாம்.

  7. இனி முஸ்லிம்கள், யாருக்கும் குர்‍ஆனை இலவசமாக கொடுக்கக்கூடாது. இப்படி இலவசமாக கொடுக்கும் போது, சிலர் படிப்பார்கள், சிலர் எரிப்பார்கள், சிலர் கிழிப்பார்கள். எனவே, இலவசமாக கொடுப்பதை நிறுத்தினால், இதுவும் இந்த பிரச்சனையை தீர்க்க உதவும்.

  8. இலவசமாக நாமே நம் வேதத்தை கொடுத்துவிட்டு, அதை அவர்கள் கனப்படுத்தவேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது சரியானதா? மேலும் அதை யாராவது கிழித்து எரிந்தால், அவன் மீது குற்றம் சுமத்துவதும் சரியானதா? நாமே யாருக்கும் கொடுக்காமல் நம் வேதத்தை வைத்துக்கொண்டால், இந்த பிரச்சனை வராதே. மேலும் குர்‍ஆனை புத்தகமாக பிரிண்டே செய்யாமல் இருந்தால், இன்னும் சூப்பராக இருக்குமல்லவா? அல்லாஹ் பாதுகாப்பது போன்று, 'முஸ்லிம்களின் மனதிலேயே குர்‍ஆனை பாதுகாத்தால், அதனை யாரும் பட்டாசுக்களில் காகிதமாக சுற்றமுடியாதல்லவா'? எப்படி, ஐடியா நன்றாக இருக்கிறதா?


இந்த ஆலோசனைகள் பைபிளுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். யாராவது பட்டாசுக்களில் பைபிள் வசன காகிதங்கள் பயன்படுத்தினார்கள் என்று கண்டனம் செய்தால், மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றலாம்.


முடிவுரை:


நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் நடைமுறை சாத்தியமற்றது என்று சொல்வீர்களானால், பட்டாசுக்களில் குர்‍ஆன் வசனங்கள் உள்ள காகிதங்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முட்டாள்தனமானதும், நடைமுறைக்கு ஏற்காத குற்றச்சாட்டாக இருக்கிறது என்பது என் கருத்தாகும்.


மக்களின் மனதை புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில், வேண்டுமென்றே குர்‍ஆனை கிழிப்பதும், எரிப்பதும் ஏற்றுக்கொள்ளகூடாத செயலாகும், கண்டிக்கத்தக்கதாகும். பட்டாசுக்களில் குர்‍ஆன் வசன ஏடுகளை பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதன்று.


குப்பைத்தொட்டிகளில், நாற்றமடிக்கும் இடத்தில் எழுந்தருளும் கடவுள்கள்:

நான் அனேக முறை குப்பைத்தொட்டிகளில் குப்பைகளை போடப்போகும் போது, அங்கே முருகன் படம், மற்ற சாமிகள் படம், இயேசுவும், மரியாளும் இருக்கும் படம் என்று அனேக பழைய படங்களை பார்க்கமுடிந்தது.


நாற்றமெடுக்கும் குப்பைத்தொட்டிகளின் பக்கத்திலே நாம் செல்லும் போது, மூக்கை மூடிக்கொண்டுச் செல்கிறோம். ஆனால், அங்கே சாமிகளில் படங்களும், தர்காக்களின் படங்களும், இயேசுவின் படங்களும் தூக்கி போடப்படுகின்றன, இதனை செய்வது யார் "நாம் தான்".


சாமி படங்களை பூஜை அறையில் மிகவும் பக்தியாக வைத்து, சுத்தபத்திரத்தோடு பூஜைகள் செய்யும் மக்கள், அப்படங்கள் பழையது ஆகிவிட்ட பிறகு, அல்லது புது வீடுகளுக்குச் செல்லும் போது, பழைய சாமி படங்களை குப்பைகளில் போட்டுவிடுகிறார்கள். இவர்களின் பக்தி அவ்வளவு தான். சாமி படங்களின் இந்த கேவளமான நிலைக்கு காரணம் 'படங்களை நாம் பயன்படுத்துவது தான்'. சாமி படங்களை குப்பைகளில் போட்டு, கடவுள்களை அவமானப்படுத்துவது யாரோ நாத்தீகர்கள் அல்ல, ஆத்திகர்கள் தான், சாமிகளை வணங்குபவர்கள் தான். இதே நிலை தான், குர்‍ஆனுக்கும் நாம் காண்கிறோம்.


கடைசியாக, ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், பட்டாசுக்களில் குர்‍ஆன் ஏடுகள் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்ற வாதமோ, மனவருத்தமோ தேவையற்றது, அதனை சரி செய்யவும் முடியாது. இதே ஆலோசனைத் தான் கிறிஸ்தவர்களுக்கும் நான் கொடுக்கவிரும்புவேன்.

source: https://www.answering-islam.org/tamil/authors/umar/whatsapp/diwali_crackers_quran_pages.html

2 views0 comments

Comments


bottom of page