top of page

இஸ்னத் (சனது) என்றால் என்ன? ஹதீஸ்கள் எப்படி பயணித்து நூல்களாக மாறின?



இஸ்னத் என்றால் சங்கிலித்தொடர் என்றுச் சொல்லலாம். ஸனது என்பது இஸ்னத் என்பதின் பன்மையாகும். முஹம்மது கூறியவைகளையும், அவரிடம் பார்த்த செயல்களையும் எழுத்துவடிவில் தொகுத்த புத்தகங்களை (செய்திகளை) ஹதீஸ்கள் என்கிறோம்.


அவைகள் புத்தகங்களாக எப்போது தொகுக்கப்பட்டன, என்று கேட்டால், முஹம்மதுவின் மரணத்திற்கு 200 ஆண்டுகளுக்கு பிறகு அவைகள் புத்தகங்களாக எழுதப்பட்டன. அதுவரை அவைகள் வாய் வழியாக பரப்பப்பட்டன.


முஹம்மது ஒரு செய்தியை தம் சஹாபா என்கிற நண்பருக்குச் சொல்கிறார், அல்லது அவரது மனைவி ஆயிஷா அவர்களிடம் சொல்கிறார், அல்லது அவர்கள் அவருடைய செயல்களைப் பார்க்கிறார்கள். இந்த செய்தியை அவரது தோழரோ, மனைவியோ மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். இவர்களிடம் செய்தியை கேட்ட மற்றவர்கள் வேறு நபர்களுக்குச் சொல்கிறார்கள். இப்படி 200+ ஆண்டுகள் முஹம்மது சொன்ன ஒரு செய்தி வாய் வழியாக பல நபர்கள் மூலமாக பரப்பப்படுகின்றது. கடைசியாக, கி.பி. 810க்கு பிறகு பிறந்த‌ புகாரி, முஸ்லிம் மற்றும் திரிமிதி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் பல ஆண்டுகள் பல நாடுகளுக்கு சுற்றித்திரிந்து அனைவரிடமிருந்து செய்திகளை சேகரித்தார்கள்.


முஹம்மதுவின் தோழர்கள் மற்றும் குடும்பத்தார்கள் தான் நேரடியாக முஹம்மது சொல்ல அல்லது அவர் செய்யக்கண்டு செய்திகளை அறிந்தார்கள்.


மற்றவர்கள் அனைவரும் முஹம்மதுவை கண்டவர்கள் அல்ல, அவர்கள் வாய்வழியாக செய்திகளை கேட்டவர்கள். முஹம்மதுவின் தோழர்கள் முதற்கொண்டு, புகாரி/முஸ்லிம்/திர்மிதி போன்ற அறிஞர்களுக்கு முன்பு வரை யார் காதுவழியாக கேட்டார்களோ, அந்த தொடரைத் தான் இஸ்னத் என்பார்கள், அதாவது முஹம்மது தொடங்கி ஒரு சங்கிலி போன்று செய்தி, ஒருவர் மாறி ஒருவருக்கு சொல்லப்பட்டு கடைசியாக புத்தகமாக 200 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது.


இதனை சுருக்கமாக கீழ்கண்ட படத்தில் தமிழில் கொடுத்துள்ளேன்.



இந்த படத்தை பெரிய அளவில் பார்க்க இந்த தொடுப்பை சோடுக்கவும்.


கீழ்கண்ட இஸ்லாமிய தளத்தில் இதே விவரங்களை வெறு வகையான படத்தின் மூலமாக விவரித்துள்ளார்கள், அதனையும் க்ளிக் செய்து பார்க்கவும்:



இந்த கீழ்கண்ட வீடியோவில், ஸனது (சங்கிலித் தொடர்) இல்லாத ஹதீஸ்களை எப்படி கையாளுவது என்பதைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது:


 

இதர இஸ்லாமிய ‘படமும் பாடமும்’

1 view0 comments

Comments


bottom of page