top of page

உங்களுடைய தண்டனையை மற்றவர்கள் மீது சுமத்தி, அல்லாஹ் அவர்களை தண்டிப்பானா?



(CAN SOMEONE ELSE TAKE YOUR PUNISHMENT?)


ஒருவரின் பாவங்களுக்காக மற்றொருவர் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். ஆனால், இஸ்லாம் இப்படி போதிப்பதில்லை, அது வேறு விதமாக போதிக்கிறது.


அல்லாஹ் முஸ்லிம்களின் பாவங்களை கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் மீது சுமத்தி முஸ்லிம்களுக்கு பதிலாக யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நரகத்தில் தள்ளுவான் என்று இஸ்லாம் சொல்கிறது.


நூல்: சஹீ முஸ்லிம் ஹதீஸ், எண் 5342, 5343, 5344


5342. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, “இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான்” என்று சொல்வான். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


5343. அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

“ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தம் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தார்கள்.. . . .


5344. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான். . . .


குர்‍ஆன் 2:62ல், யூதர்களும் கிறிஸ்தவர்களுக்கும் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது என்று சொல்கிறது. ஆனால், மேலே கண்ட ஹதிஸ் குர்‍ஆனுக்கு மாற்றமாகச் சொல்கிறது.


குர்‍ஆன்  2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)


இஸ்லாமின் படி, தாம் விரும்புபவர்களை அல்லாஹ் வழிதவறச் செய்கின்றான், தான் விரும்புபவர்களை நேர்வழியில் நடத்துகிறான். ஆகையால், இஸ்லாமில் அழைப்புப்பணி (தாவா பணி) செய்யவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால், யார் இஸ்லாமை ஏற்கவேண்டும் என்று அவன் ஏற்கனவே முடிவு செய்துவிட்டானே! 


முஸ்லிம்கள் தாவா பணி செய்து அல்லாஹ்வின் முடிவை மாற்ற முயலுவது சாத்தியமான காரியமா? இதுமட்டுமல்ல, குர்‍ஆனில் எங்கும் முஸ்லிம்கள் தாவா பணி செய்யும்படி சொல்லப்படவில்லை. இது மட்டுமல்ல, வேதம் கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களிடம் சென்று, உங்களுக்கு எவைகள் இறக்கப்பட்டுள்ளதோ அதனை பின்பற்றுங்கள் என்று சொல்லுவது முஸ்லிம்கள் செய்யவேண்டியது. ஏனென்றால், இதைத் தான் குர்‍ஆன் சொல்கிறது.


முஸ்லிம்களுக்கு குர்‍ஆன் 'வேதங்கள் மீதும், மலக்குகள் (தேவ தூதர்கள்) மீதும், நபிகள் மற்றும் கடைசி நியாயத்தீர்ப்பு நாள் மீதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள்' என்று அடிக்கடி சொல்கிறது. ஆனால், இந்த குர்‍ஆனின் கட்டளையை பின்பற்றக்கூடிய ஒரு முஸ்லிமையும் நான் இதுவரை காணவில்லை. அதற்கு பதிலாக முந்தைய வேதங்கள் தொலைந்துவிட்டன அல்லது மாற்றப்பட்டுவிட்டன என்று சொல்லும் முஸ்லிம்கள் தான் உள்ளனர். குர்‍ஆனின் மேலே கண்ட கட்டளை நியாயத்தீர்ப்பு நாள்வரையுள்ள  கட்டளையென்று முஸ்லிம்களுக்குத் தெரியுமா?


 
1 view0 comments

コメント


bottom of page