top of page

எலியா(எலியாஸ்) நபியின் இறைவன் யார்? – யெகோவா? / அல்லாஹ்?


பைபிளில் வரும் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவமுள்ளது. மேலும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பொருள் உள்ளது. இந்த எலியா என்ற பெயரின் பொருள் என்ன?

  1. El + i = My God

  2. Yah = Yahweh

  3. Eli-Yah = MY GOD IS YAHWEH

  4. எல் + இ = என் இறைவன்

  5. யா = யெகோவா

  6. எலியா = என் இறைவன் யெகோவா

இது ஒரு அதிசயமான பெயர். தான் வணங்கும் இறைவனின் பெயரையே தன் பெயரில் தாங்கிக்கொண்டு இருக்கிறார் எலியா. இதைப் பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கும் போது,  பைபிளில் யெகோவா என்ற பெயரை தாங்கிய மற்றவர்களும் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்தது. உடனே தேட ஆரபித்தேன். யெகோவா என்ற வார்த்தை வரும் பெயர்கள் சிலவற்றை பைபிளிலிருந்து எடுத்து இங்கு தருகிறேன். கீழ்கண்ட பட்டியலைப் பாருங்கள்:

(குறிப்பு: “யா” என்று எபிரேய மொழியில் ஒரு பெயரை முடிக்கும் போது, அது யெகோவா தேவனை குறிக்கும் என்பதை அறியவும். ஆங்கிலத்தில் “Y”விற்கு பதிலாக “J”  என்று எழுதுகிறார்கள். ஆக, எலியா என்ற பெயரை ஆங்கிலத்தில் “Elijah” என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.)

எண்

பெயர்

அர்த்தம்/பொருள்

ஆங்கிலத்தில் பெயரும் பொருளும்1

அபியா

யெகோவா என் பிதாAbijah: My Father is Yahweh2

அதோனியா

யெகோவா என் ஆண்டவர்Adonijah, a son of David. His name means: My Lord is Yahweh3

அமரியா

யெகோவா கூறினார்Amariah, means Yahweh Has Said.4

ஆனாயா

யெகோவா பதில் கொடுத்தார்Anaiah, means Yahweh Has Answered.5

அசரியா

யெகோவா உதவி செய்தார்Azariah, one of Daniel’s friends. His name means: Yahweh Has Helped.6

அசசியா

யெகோவா வலிமையுள்ளவர்Azaziah, means Yahweh Is Strong7

பெனாயா

யெகோவா கட்டினார்Benaiah, means Yahweh Has Built8

கெதலியா

யெகோவா பெரியவர்Gedaliah, means Yahweh is Great9

கெமரியா

யெகோவா செய்து முடித்தார்Gemariah, means Yahweh Has Completed10

அனனியா

யெகோவா கிருபையுள்ளவர்Hananiah, means Yahweh Is Gracious11

எசேக்கியா

யெகோவா பெலப்படுத்துகிறார்Hezekiah, a King of Judah. His name means Yahweh Strengthens12

ஒதியா

யெகோவாவின் மாட்சிமைHodiah, means Majesty Of Yahweh13

ஏசாயா

யெகோவா என் இரட்சிப்புIsaiah is one of the major prophets. His name means Yahweh Is Salvation14

எகொனியா

யெகோவா ஸ்தாபிப்பார் / நிருபிப்பார்Jeconiah, means Yahweh Will Establish15

யோயாக்கீம்

யெகோவா உயர்த்தினார்Jehoiakim, means Raised by Yahweh16

யோராம்

யெகோவா மேன்மைபடுத்தினார்Jehoram, name of two kings in Israel. The name means Exalted By Yahweh17

யோசபாத்

யெகோவா நியாயந்தீர்த்தார்Jehoshaphat, a king of Judah. His name means Yahweh Has Judged.18

யெகூ

அவர் யெகொவாJehu, a king of Israel. His name means Yahweh Is He.19

எரேமியா

யெகோவா உயர்த்துவார்Jeremiah, one of the major prophets. His name means Yahweh Will Exalt.20

எரியா

யெகோவா கற்றுக்கொடுத்தார்Jeriah, means Taught By Yahweh21

யோவாப்

யெகோவா பிதா ஆவார்Joab, a commander of David’s army. His name means Yahweh Is Father.22

யோவாஸ்

யெகோவாவின் அக்கினிJoash, a king of Judah. Meaning Fire of Yahweh23

யோவேல்

யெகோவா’வே இறைவன்Joel, name of a prophet. The name means Yahweh Is God.24

யோவான்

யெகோவா கிருபையுள்ளவர்John (Yochanan in Hebrew), means Yahweh Is Gracious25

யோனத்தான்

யெகோவா கொடுத்தார்Jonathan, son of King Saul and friend of David. Yahweh Has Given26

யோசுவா

யெகோவா இரட்சிப்புJoshua, successor of Moses. Yahweh Is Salvation27

யோசியா

யெகோவா ஆதரிக்கிறார்Josiah, a king of Judah. The name means Yahweh Supports28

யோதாம்

யெகோவா பிழையில்லாதவர்Jotham, a king of Judah. Means Yahweh Is Perfect29

மத்தேயு

யெகோவாவின் பரிசுMatthew, one of the apostles. His name means Gift Of Yahweh30

மிகாயா

யெகோவாவைப் போன்று யாருண்டுMicaiah, means Who Is Like Yahweh31

நெகேமியா

யெகோவா ஆறுதல் செய்கிறார்Nehemiah, means Yahweh Comforts32

நேரியா

யெகோவாவின் விளக்குNeriah, means Lamp Of Yahweh33

நெத்தனியா

யெகோவா கொடுத்தார்Nethaniah, means Yahweh Has Given34

ஒபதியா

யெகோவாவிற்கு ஊழியம் செய்கிறேன்Obadiah, name of a prophet. The name means, Serving Yahweh35

செராயா

யெகோவா என் ஆட்சியாளர்Seraiah, means Yahweh Is Ruler36

சேமாயா

யெகோவா கேட்டார்Shemaiah, means Heard By Yahweh37

உரியா

யெகோவா என் வெளிச்சம்Uriah, means Yahweh Is My Light38

உசியா

யெகோவா என் பெலன்Uzziah, a king of Judah. Means, My Power Is Yahweh39

செப்பதியா

யெகோவா அளித்தார்Zebadiah, means Yahweh Has Bestowed40

சகரியா

யெகோவா நினைவுகூர்ந்தார்Zechariah, father of John the Baptist. His name means, Yahweh Remembers41

சிதேக்கியா

யெகோவாவின் நீதிZedekiah, last king of Judah. Means, Justice Of Yahweh42

செப்பனியா

யெகோவா மறைத்துவைத்தார்Zephaniah, name of a prophet. His name means, Yahweh Has Hidden

முஸ்லிம்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள்:


  1. பைபிளில் அல்லாஹ்வின் பெயர் எங்கே?

  2. அல்லாஹ் என்ற பெயரை ஒருவரும் கேள்விப்படவில்லையா?

  3. பைபிளின் நபிகள் அனைவரும் அல்லாஹ்வின் நபிகள் தான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அப்படியானால், அல்லாஹ்வின் பெயர் தான் யெகோவாவா?

உண்மையென்னவென்றால்,  யெகோவா என்ற பெயரை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை.

மேற்கண்ட பட்டியலில் யெகோவாவிற்கு மகிமை உண்டாகும்படி பல பெயர்களை காண்கிறோம், இதில் தீர்க்கதரிசிகளும்  இருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் பெயரில் ஒரு நபரின் பெயரையும் நம்மால் காணமுடியவில்லை. அல்லாஹ்வின் பெயரைக் கொண்ட ஒருவரின் பெயராவது பைபிளில் இருக்கவேண்டாமா?

முஸ்லிம்கள் நம்மிடம் “எல்- El” என்ற எபிரேய சொல் “அல்லாஹ்வை”க் குறிக்கும் சொல் என்றுச் சொல்வார்கள்.  ஆனால், இது உண்மையில்லை.

“எல் என்பது ஒரு தனிப் பெயர் இல்லை, இது இறைவனைக் குறிக்கும் பொதுப் பெயராகும் (El is not a proper noun. The word El just means God).

எடுத்துக்காட்டு:


  1. எசேக்கியேல் என்ற சொல்லின் பொருள் 'இறைவன் பெலப்படுத்துவார்' என்பதாகும்.

  2. எசேக்கியா என்ற சொல்லின் பொருள் 'யெகோவா பெலப்படுத்துவார்' என்பதாகும்.

இவ்விரண்டு பெயர்களின் பொருள்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கவனியுங்கள். “இறைவன்” என்பது பொதுப்பெயர்,  “யெகொவா” என்பது தனிப்பெயர்.

அரபி மொழியில் எடுத்துக்கொண்டாலும்:

  1. இலா – ila” என்றால் “இறைவன்/கடவுள்/ஆண்டவர்” என்று பொருள் (பொதுப்பெயர்).

ஆனால்,

  1. அல்லாஹ் – Allah” என்றால் அது 'இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே குறிக்கும்' என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள் அல்லவா.

இதே போலத்தான், எல் என்பது பொதுப்பெயர், யெகோவா என்பது தனிப் பெயர்.

பைபிளின் இறைவனின் பெயர் யெகோவா ஆகும், பைபிளின் இறைவனின் பெயர் 'இறைவன்' இல்லை.

  1. But the LORD (Yahweh) is the true God; he is the living God and the everlasting King. Jeremiah 10:10

  2. கர்த்தரோ (யெகோவா) மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா;  . . . (எரேமியா 10:10 )

குறிப்பு: தமிழ் பைபிளில், பழைய ஏற்பாட்டை, மொழியாக்கம் செய்யும் போது, “யெகொவா” என்ற எபிரேய பெயர் வரும் இடங்களில் “கர்த்தர்” என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். இந்த இடங்களில் “யெகோவா” என்றே மொழியாக்கம் செய்திருக்கவேண்டும். இதே போன்று ஆங்கில மொழியாக்கங்களில் யெகோவா என்று வரும் இடங்களில் “லாட் – LORD” என்று பெரிய எழுத்துக்களில் மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில், எலியா என்றால் “என் இறைவன் யெகோவா” என்று பொருள் என்பதைப் பார்த்தோம். முஸ்லிம்கள் “எல்” என்றால் அல்லாஹ் என்று சொல்வார்களானால், எலியா என்றால் “என் அல்லாஹ் யெகோவா ஆவார்” என்று பொருள் வரும். இதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இஸ்லாம் முழுவதிலும் அதாவது குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் எங்கும், யெகோவா என்ற பெயர் ஒரு முறை கூட பயன்படுத்தப்படவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.   

இம்மானுவேல்:

இயேசுவின் இன்னொரு பெயர் 'இம்மானுவேல்' என்பதாகும், இதன் பொருள் இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பதாகும், – அதாவது சரீரதாரியாக வந்த இறைவன் இயேசுவாக நம்மோடு இருக்கிறார்.

முஸ்லிம்கள் “எல்” என்பது அல்லாஹ்வைக் குறிக்கும் என்றுச் சொல்வார்களானால், இம்மானுவேல் என்றால், “அல்லாஹ் நம்மோடு இருக்கிறார்” என்று பொருள் வருகிறது. அப்படியானால், இயேசு நம்மோடு இருந்தால், அதன் அர்த்தம் “அல்லாஹ் நம்மோடு இருக்கிறார்” என்று வருகிறது. இதுவும் இஸ்லாம் சொல்லும் போதனையல்லவே!

அல்லாஹ்வை கனப்படுத்த முஸ்லிம்கள் தங்கள் பெயர்களில் 'லாஹ் – lah' என்பதை சேர்த்துக்கொள்கிறார்கள்.

எடுத்துக்காட்டு: 

  1. “அப்துல்லாஹ்” இதன் பொருள் “அல்லாஹ்வின் அடிமை” என்பதாகும்.

  2. “அமானுல்லாஹ்” இதன் பொருள் “அல்லாஹ்வின் பாதுகாப்பு” என்பதாகும்.

இதே போல, யூத கிறிஸ்தவர்கள் தங்கள் பெயர்களில் “யா” என்ற ஒரு எழுத்தை பெயரின் கடைசியில் அல்லது பெயரின் ஆரம்பத்தில் சேர்த்து, “யெகோவா” தேவனுடைய‌ பெயர் தங்கள் பெயர்களில் வைத்துக்கொண்டு கனப்படுத்துகிறார்கள்.

பைபிளின் எபிரேய தீர்க்கதரிசிகள் யெகோவா தேவனை தொழுதுக்கொண்டார்கள், அவருக்கு ஊழியம் செய்தார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் அல்லாஹ் என்ற பெயரை கேள்விப்படவும் இல்லை, அப்பெயர் பற்றிய வேறு விவரங்களை அறியவும் இல்லை.

ஆனால், எபிரேய தீர்க்கதரிசிகளை குர்‍ஆன் கடத்தி வைத்துக்கொண்டு, இவர்கள் அல்லாஹ்வின் தீர்க்கதரிசிகள் என்றுச் சொல்வது அறிவுடமையாகத் தெரியவில்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், குர்‍ஆன் கடத்திய எபிரேய தீர்க்கதரிசிகளின் பெயர்களிலேயே யெகோவா தேவனின் பெயர் உள்ளது.

எடுத்துக்காட்டு:

  1. “எலி-யா” என்றால் “என் இறைவன் யெகோவா” என்று பொருள்.

  2. “ஜகரிய்-யா” என்றால், “யெகோவா நினைவு கூறினார்” என்று பொருள்.

யெகோவாவின் நபிகளை, அல்லாஹ்வின் நபிகளாக காட்டவேண்டுமென்றால், அல்லாஹ் அவர்களின் பெயர்களை மற்றியிருந்திருக்கலாம்.

  1. “எலி-யா” என்ற நபியின் பெயரை “எலிலுல்லாஹ்” என்றும்

  2. “ஜகரிய்-யா” என்ற பெயரை “ஜகருல்லாஹ்” என்று மாற்றியிருந்திருக்கலாம்.

அடுத்தபடியாக இஸ்லாமின்படி, ஒரு பெயர் “லாஹ் -lah” என்று முடிவு பெற்றாலோ, அல்லது “அல்” என்ற இரு எழுத்துக்கள் பெயர்களில் இருந்தாலோ அது அல்லாஹ்வை குறிக்கும் என்று நம்பப்படுவதினால், இப்படிப்பட்ட பெயர்கள் பைபிளில் உள்ளதா என்று தேடிப்பார்க்க முடிவு செய்தேன். அல்லாஹ்வின் பெயருக்கு ஓரளவிற்கு அருகாமையில் வரும் பெயர்களை பைபிளிலிருந்து தேடி கண்டுபிடித்து கீழே கொடுத்துள்ளேன், அவைகளை படிக்கவும்.

இந்த பெயர்களில் அல்லாஹ் இருக்கிறார் என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், அதனை ஏற்றுக்கொள்வதற்கு கிறிஸ்தவர்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை.


எண்

பெயர்

அர்த்தம்/பொருள்

ஆங்கிலத்தில் பெயரும் பொருளும்1

மாகலா (Maha-lah)

பெலவீனம் (அ) உடல் நலக்குறைவு

Maha-lah, means weak or sick – 1 Chronicles 7:182

தெலீலாள் (Deli-lah)

பெலவீனம்

Deli-lah, means weak and languishing – Judges 16:43

ஏலாள் (He-lah)

துரு பிடித்தல்

He-lah, means rust – 1 Chronicles 4:54

உல்தாள்(Huldah)

மரநாய் (அ) மோல் என்ற ஒரு உயிரினம்

Huldah, means weasel or mole – 2 Kings 22:145

பேலியாள் (Belial)

மதிப்பில்லாத‌

Belial, means worthless – Deuteronomy 13:13

ஆங்கில மூலம்: https://www.faithbrowser.com/the-god-of-elijah/

தேதி: 15th Mar 2020

 
1 view0 comments

Comments


bottom of page