குர்ஆன் 1:4 இது எந்த வகை வேதம்: மாலிகி, மலிகி, மாலிக, மல்கி, மில்கி, மிலிகி, மலக, மாலிக், மில்க, .
குர்ஆனின் முதல் அத்தியாயம் நான்காம் வசனம், கீழ்கண்டவாறு உள்ளது:
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).(முஹம்மது ஜான் தமிழாக்கம்)
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி (சவூதி தமிழாக்கம்)
ஹஃப்ஸ் குர்ஆன் அரபி மூலத்தில்: மாலிகி யௌமித்தீன் (مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ)
இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் பயன்படுத்துவது, ஹஃப்ஸ் குர்ஆன் ஆகும். இது இமாம் ஹஃப்ஸ் என்பவர் மூலமாக கொடுக்கப்பட்ட குர்ஆன் (கிராத்) ஆகும். இதே போன்று, முஹம்மதுவின் காலம் தொடங்கி பல இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மூலமாக குர்ஆன் ஓதப்பட்டு, நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது.
ஆக, இன்று நம்மிடம் 20க்கும் அதிகமான அரபி மூல குர்ஆன்கள் உள்ளன. அவைகளை குர்ஆன் கிராத்துக்கள் என்பார்கள். இவைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லை, ஒரே வார்த்தையை வெவ்வேறு விதமான வார்த்தைகளைக் கொண்டு ஓதியுள்ளார்கள் மற்றும் எழுதியுள்ளார்கள். இந்த அரபி மூலங்கள் அனைத்தும் நம்மிடம் உள்ளன.
குர்ஆன் ஏழுவட்டார மொழி வழக்கில் இறங்கியது என்று முஹம்மது கூறியுள்ளார், அதனை இஸ்லாமிய உலகம் அங்கீகரிக்கிறது. இந்த ஏழு வட்டார குர்ஆன்கள் தான் இன்னும் பெருகி இப்போது 20க்கும் அதிகமான குர்ஆன்களாக மாறியுள்ளது. இக்கட்டுரையின் கடைசியில் ஏழுவட்டார குர்ஆன் பற்றிய முந்தைய கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுத்துள்ளேன்.
இக்கட்டுரையின் ஆய்வு குர்ஆன் 1:4ம் வசனத்தில் வரும் ஒரு வார்த்தையைப் பற்றியதாகும். கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும். குர்ஆன் 1:4ல் வரும் வசனத்தை அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் எப்படி மாற்றி உச்சரித்து இருந்துள்ளார்கள் என்பதை அறியமுடியும்.
மேற்கண்ட அட்டவணையின் வண்ணங்களை கணக்கில் கொள்ளவேண்டாம், கிராத்துக்களை வேறுபடுத்திக் காட்ட பல வண்ணங்களை கொடுத்துள்ளேன், அவ்வளவு தான்.
இந்த அட்டவணையில் உள்ளவற்றை புரிந்துக்கொள்ள சில விளக்கங்களை இப்போது பார்ப்போம்:
1) மாலிகி (māliki):
மாலிகி என்ற வார்த்தையை பயன்படுத்தும் கிராத்துக்கள் (குர்ஆன்கள்) மற்றும் அறிஞர்கள் பற்றிய விவரம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் குர்ஆன், 1924ம் ஆண்டு எகிப்து வெளியிட்ட ‘ஹஃப்ஸ் கிராத்தில்’ உள்ள குர்ஆன் ஆகும், இது தான் முதன் முதலில் பிரிண்ட் (அச்சு) செய்யப்பட்ட குர்ஆன் ஆகும். இதை “Print edition of the Quran” என்றும் ஆஸிம் வழியாக, ஹஃப்ஸ் இமாம் மூலமாக வந்த குர்ஆன் என்றும் கூறுவார்கள். இதில் மாலிகி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக, இப்னு முஜாஹித் என்ற இஸ்லாமிய அறிஞர், தம்முடைய ” Kitāb al-sabʿa fī l-qirāʾāt” என்ற புத்தகத்தில் பல கிராத்துக்கள் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார். இவர் குர்ஆனின் கிராத்துக்களில் ஆய்வு செய்த சிறந்த அறிஞர் ஆவார். இவர் தம் புத்தகத்தில், முஹம்மதுவும், ஆஸிம் என்பவரும் (இவர் தான் ஹஃப்ஸ் இமாமின் ஆசிரியர்), மேலும் அல் கிசாய் என்ற கிராத்திலும், இதே வார்த்தை அதாவது ‘மாலிகி’ என்பதை பயன்படுத்தியுள்ளார்கள் என்று கூறுகின்றார். (இவரைப் பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்கவும்).
அடுத்ததாக அபூ அமர் அத்தானி என்ற இஸ்லாமிய அறிஞர் பற்றியது, இவரும் குர்ஆனின் கிராத்துக்கள் மற்றும் ஹதீஸ்கள் பற்றிய ஆய்வுகள் செய்தவர் ஆவார். இவர் தமது ” Kitāb at-Taisīr fī ‘l-qirāʾāt as-sabʿ” என்ற புத்தகத்தில், ஆஸிமும், அல் கிசாயும் “மாலிகி” என்ற வார்த்தையை தங்கள் கிராத்துக்களில் பயன்படுத்தினார்கள் என்று கூறுகின்றார்.
மேற்கண்ட அட்டவணையில் “நஃபி(Nafi)” என்று இருப்பது தான் “வர்ஷ்” குர்ஆன் ஆகும்.
இப்போது உங்களுக்கு மேற்கண்ட அட்டவணையை எப்படி படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று தெரிகின்றதா? இதே போன்று தான் 2 லிருந்து 20 வரை, பலர் பல வகையில் குர்ஆனை ஓதியுள்ளார்கள், முக்கியமாக குர்ஆன் 1:4ம் வசனத்தில் வரும் ஒரு வார்த்தையை 20க்கும் அதிகமான வகையில் ஓதியுள்ளார்கள்.
māliki – மாலிகி
maliki – மலிகி
malki – மல்கி
milki – மில்கி
miliki – மிலிகி
mālika – மாலிக
malaka – மலக
malika – மலிக
mālik – மாலிக்
malka – மல்கா
malkī – மல்கீ
milka – மில்க
maliku – மலிகு
malikan – மலிகன்
mālikun – மாலிகுன்
māliku – மாலிகு
malīki – மலீகி
mēliki – மேலிகி
mæliki – மெயிலிகி
mallāki – மல்லாகி
1924ம் ஆண்டு ஹஃப்ஸ் கிராத்தில் உள்ள குர்ஆனை பிரிண்ட் எடுத்ததால், இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் “மாலிகி” என்று குர்ஆன் 1:4ஐ வாசிக்கிறார்கள். ஒரு வேளை, வர்ஷ் கிராத் குர்ஆனை பிரிண்ட் செய்து இருந்திருந்தால், முஸ்லிம்கள் “மலிகி” என்று இன்று வாசித்து இருந்திருப்பார்கள்.
கார்பஸ் கொரோனிகம் தளம்:
இந்த தளம் குர்ஆனின் ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகள், சுருள்கள் பற்றிய ஆய்வு, குர்ஆன் கிராத்துக்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்கிறது. குர்ஆனின் பழமையான பிரதிகளை படமெடுத்து வெளியிடுகிறது. குர்ஆனின் ஆய்வுகளை செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தளமாகும். இந்த தளத்திருந்து தான் தற்போது படித்துக் கொண்டு இருக்கும் கட்டுரையை நான் தொகுத்தேன்.
இந்த தளம் தன்னைப் பற்றிச் சொல்லும் விவரங்களை இங்கு படிக்கலாம்.
About the project: Corpus Coranicum – Textual documentation and historically critical commentary on the Qur’an
The project’s goals: The project offers systematic access to early Qur’anic manuscripts with images and transliterated text. In parallel, a catalogue of variant readings included in the works of the Islamic scholarly tradition is produced. Based on textual history, the project creates a chronological commentary using methods of literary studies and refering to relevant texts from Antiquity and Late Antiquity. These source texts are accessible in the database ‘Texts from the environment of the Qur’an’ (TEQ). The development of the first Muslim community is reconstructed for the first time as the interaction between the Prophet and the first addressees in Mecca and Medina.
ஏழு வட்டார மொழி வழக்க குர்ஆன்கள் பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:
7 வட்டார மொழிகளில் குர்ஆனா? இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது
குர்ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை?
முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?
ஏழு வட்டார மொழிவழக்கில் குர்ஆன் – நடைமுறை சிக்கல்களும் தீர்வுகளும்
20+ குர்ஆன்கள் உண்டா? குர்ஆன் கிராத்துக்களை எங்கே வாங்கலாம்?
முடிவுரை:
உலகம் முழுவதும் உள்ள குர்ஆன்கள் அனைத்தும் ஒரே விதமாக எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை, வசனத்துக்கு வசனம் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று முஸ்லிம்கள் அறிஞர்கள் இன்று வரை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இக்கூற்றுக்கள் பொய்யானவை என்பதற்கு, இன்று நாம் பார்த்த ஒரே ஒரு வார்த்தையின் ஆய்வு ஒர் சான்றாகும்.
அல்லாஹ் முஹம்மதுவிற்கு குர்ஆனை இறக்கும் போது, எப்படி இறக்கினான்? முக்கியமாக 1:4ம் வசனத்தில் வரும் வார்த்தை எப்படி இருந்தது? மேற்கண்ட 20 வகைகளில் அவன் இறக்கினான் என்றுச் சொல்வது, முட்டாள்தனமான கூற்றாகும். அல்லாஹ் அதனை ஒருவகையில் தான் இறக்கியிருப்பான், ஆனால் காலப்போக்கில் அவைகள் 20க்கும் அதிகமான வகைகளாக மாறியது. அல்லாஹ் குர்ஆனை பாதுகாத்தானா? இந்த கேள்வி இனி தேவையற்றது.
ஓசையிலேயே நாம் குர்ஆனை காப்போம் என்று அல்லாஹ் கருதியது முதல் குற்றம், குர்ஆனை எழுதி வைக்காமல் இருந்தது இரண்டாவது குற்றம். இதன் விளைவு? ஒரு வசனத்தின் ஒரு வார்த்தையை ஆய்வு செய்தாலே தலை சுற்றுகிறதே, குர்ஆனின் 6236 வசனங்களையும், குர்ஆன் கிராத்துக்களையும் ஆய்வு செய்தால், குர்ஆன் தாக்கு பிடிக்குமா? உண்மையை அறிய விரும்புகிறவர்கள் ஆய்வு செய்வார்களா?
தேதி: 26th Oct 2020
Recent Posts
See Allகுர்ஆன் ஏழு வட்டார மொழிகளில் முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதென்று இஸ்லாம் சொல்கிறது. இதைப் பற்றி சன்னி முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்களில் அதிகார...
Comments