சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000: பாகம் 13 "இஸ்லாமிய கலைச்சொற்கள்/அகராதி"
“சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000” தொடரின் முந்தைய பதிவுகளை இங்கு சொடுக்கி படிக்கலாம். குர்ஆன், முஹம்மது, பைபிள், அல்லாஹ் யெகொவா, கிறிஸ்தவம் போன்ற தலைப்புகளில் இதுவரை 360 கேள்வி பதில்களை பார்த்துள்ளோம். இந்த கட்டுரையில் “இஸ்லாமிய கலைசொற்கள் அல்லது இஸ்லாமிய அகராதி” என்ற தலைப்பில் மேலும் 30 கேள்வி பதில்களைக் காண்போம்.
ஆன்மீகத்தில் ஓரளவிற்கு ஈடுபாடு கொண்ட ஒரு முஸ்லிம் சகோதரர் அல்லது சகோதரியிடம் பேசும் போது, பல அரபிச் சொற்கள் இடையிடையே வருவதை காணமுடியும். மேலும் நாம் குர்ஆனை தமிழில் படிக்கும் போது கூட, பல அரபி வார்த்தைகள் அப்படியே “தமிழாக்கம்” செய்யப்படாமல் “ஒலியாக்கம்(Transliteration)” செய்துயிருப்பதை காணமுடியும். இந்த கேள்வி பதில் தொடரில் அப்படிப்பட்ட சொற்களின் விளக்கங்களை கற்றுக்கொள்வோம், மட்டுமல்லாமல் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ளவும் இது உதவி புரியும்.
கேள்வி 361: இஸ்லாமிய நாட்காட்டி(Islamic Calendar) என்றால் என்ன? அது எப்போது தொடங்கப்பட்டது?
பதில் 361: இஸ்லாமிய காலண்டர் (நாட்காட்டி) பற்றி அறிவதற்கு முன்பு, கிரெகோரியன் காலண்டர்(Gregorian calendar) என்றால் என்னவென்பதை சுருக்கமாக பார்ப்போம்.
கிரெகோரியன் நாட்காட்டி (Gregorian calendar) என்பது சர்வதேச அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.
இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய “திருத்தந்தை பதின்மூன்றாம் கிரெகோரியன் ” ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு “கிரெகோரியன் நாட்காட்டி” என்னும் பெயர் வழங்கலாயிற்று. இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. (மூலம்: விக்கிபீடியா – ta.wikipedia.org/s/qp)
இன்று நம்முடைய அனுதின அலுவல்களுக்காகவும், மற்ற எல்லா விதமான காரியங்களுக்காக நாம் பயன்படுத்திக்கொண்டு இருப்பது இந்த கிரெகோரியன் காலண்டரைத் தான்.
இஸ்லாமிய நாட்காட்டி:
இஸ்லாமிய நாட்காட்டி என்பது கி.பி. 622ம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டதாகும். அதாவது, இந்த ஆண்டில் முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரா (இடம் பெயர்ந்தார்) செய்தார். முஸ்லிம் சமுதாயம் இந்த தேதியை முக்கியப்படுத்தி தங்கள் நாட்காட்டியை தயாரித்துள்ளார்கள்.
சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய நாட்காட்டி தயாரிக்கப்படுவதினால், இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு ஆண்டுக்கு 354/355 நாட்கள் வருகின்றது. கிரெகோரியன் அல்லது கிறிஸ்தவ நாட்காட்டியில் 365/366 நாட்கள் ஒரு ஆண்டுக்கு வருகிறது என்பதை கவனிக்கவும்.
இஸ்லாமிய நாட்காட்டியின் படி தேதியை குறிப்பிடும் போது தமிழில் “ஹிஜ்ரி” என்றும், ஆங்கிலத்தில் A.H (After Hijra) என்றும் எழுதுவார்கள்.
கீழ்கண்ட இரண்டு குர்ஆன் வசனங்களின் படி, சந்திரனை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய நாட்காட்டி தயாரிக்கப்படுகின்றது.
குர்ஆன் 2:189. (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. . . ..
குர்ஆன் 10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
இஸ்லாமிய 12 மாதங்களின் பெயர்கள்:
ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களை கொண்டு இருக்கும்.
1) முஹர்ரம்
2) ஸபர்
3) ரபியுல் அவ்வல்
4) ரபியுல் ஆஹிர்
5) ஜமாத்திலவ்வல்
6) ஜமாத்திலாஹிர்
7) ரஜப்
8) ஷஃபான்
9) ரமளான் (ரமலான்)
10) ஷவ்வால்
11) துல்காயிதா
12) துல்ஹஜ்
இதனால், இஸ்லாமிய ஆண்டு என்பது, கிரெகோரியன் நாட்காட்டியை விட 11 நாட்கள் குறைவாக இருக்கும்.
இஸ்லாமிய நாட்காட்டியை பிரிண்ட் எடுப்பதில் உள்ள சிக்கல்:
கிரெகோரியன் அல்லது கிறிஸ்தவ நாட்காட்டியை கணக்கிட்டு பல ஆண்டுகளுக்கான நாட்காட்டியை பிரிண்ட் எடுத்துக்கொள்ளமுடியும், ஏனென்றால் சூரியனை அடிப்படையாகக் கொண்டு கிரெகோரியன் காலண்டர் உள்ளது. அதாவது பூமி தன்னைத் தானே சுற்ற எவ்வளவு மணி பிடிக்கிறது, பூமி சூரியனை ஒரு முறை சுற்ற எத்தனை நாட்கள் பிடிக்கிறது என்று கணித்து நாட்காட்டியை தயாரிக்கிறார்கள்.
ஆனால், இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு புதிய மாதம் பிறந்ததா இல்லையா? என்பதை சந்திரனின் பிறையைப் பார்த்து முடிவு செய்கிறார்கள்.
சில நேரங்களில் மேகமூட்டத்தினால் நாம் பிறையை பார்க்கமுடியாது, அப்படியானால் எப்படி புது மாதத்தை சரியாக கணக்கிடுவது? இதனால் தான் இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு மாதம் 29 நாட்களாகவும் இருக்கும், 30 நாட்களாகவும் இருக்கும்.
ஒரு வேளை ஒரு ஆண்டுக்கான மாதங்களை, நாட்களை முன்பாகவே கணித்து, ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள் என்றுச் சொல்லி பிரிண்ட் எடுத்தாலும், அந்த மாதம் தொடங்கும் போது, பிறையைப் பார்த்து மாற்றிக்கொள்ளவேண்டி வரும். பிறை தெரிந்தால் நாளை புது மாதம் தொடங்கும், பார்க்கமுடியவில்லையென்றால், நாளை மறுநாள் புதுமாதம் என்று கருதப்படும்.
கிரெகோரியன் நாட்காட்டிக்கு மாறிய் சௌதி அரேபியா:
சௌதி அரேபியா 2016ம் ஆண்டு வரை இஸ்லாமிய நாட்காட்டியை பயன்படுத்திக் கொண்டு இருந்தது. அதாவது வியாபாரம், அலுவல்கள் மற்றும் மத சம்மந்தப்பட்ட காரியங்கள் அனைத்திற்கும் இஸ்லாமிய நாட்காட்டியை பயன்படுத்தியது. ஆனால், அலுவல்கள் மற்றும் வியாபார காரியங்களுக்கு, வானத்தைப் பார்த்து பிறை தெரிகின்றதா? இல்லையா? என்று பார்த்துவிட்டு, வியாபாரத்தைச் செய்யமுடியாது, என்பதால் சௌதி அரசு இந்த மாற்றத்தை கொண்டு வந்தது.
இந்த மாற்றத்தைப் பற்றி The Economist (த எகனாமிஸ்ட்) என்ற ஆங்கில செய்தித்தாள் கீழ்கண்ட வாறு எழுதியுள்ளது.
Saudi Arabia adopts the Gregorian calendar
THE kingdom presented its shift from the Islamic to the Gregorian calendar as a leap into modernity. In April the dynamic deputy crown prince of Saudi Arabia, Muhammad bin Salman, chose to call his transformation plan Vision 2030, not Vision 1451 after the corresponding Islamic year as traditionalists might have preferred. Recently his cabinet declared that the administration is adopting a solar calendar in place of the old lunar one. Henceforth they will run the state according to a reckoning based on Jesus Christ’s birth, not on the Prophet Muhammad’s religious mission.
But puritans in Islam’s birthplace are wincing at their eviction from control first over public space, and now of time. Guardians of the Wahhabi rite, who seek to be guided by Muhammad’s every act, ask whether they are now being required to follow Jesus. A slippery slope, the clergy warn, to forgetting the fasting month of Ramadan altogether; the authorities are rewinding the clock to the jahiliyyah, or pre-Islamic age of ignorance. The judiciary, a clerical bastion, still defiantly insists on sentencing miscreants according to the old calendar
இதே போன்று அரப்நியூஸ் என்ற செய்தித்தாளும் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
KSA switches to Gregorian calendar – https://www.arabnews.com/node/993061/saudi-arabia
இஸ்லாமிய நாட்காட்டியை நீக்கி, புதிய நாட்காட்டியை புகுத்திய அக்பர்:
இஸ்லாமிய நாட்காட்டியினால் வரி போடுவதிலும், வருமானம் வசூலிப்பதிலும் பிரச்சனை இருப்பதினால், முகலாய அரசர் அக்பர், சூரியனை அடிப்படையாகக் கொண்டு ஒரு காலண்டரை தயாரித்து பாங்களாதேஷில் அறிமுகம் செய்ததாக கூறப்படுகின்றது.
அதாவது, கிரெகோரியன் நாட்காட்டியோடு ஒப்பிடும் போது, இஸ்லாமிய நாட்காட்டி 11 நாட்கள் ஒரு ஆண்டுக்கு குறைவாக உள்ளது.
கிரெகோரியன் காலண்டரின் 30 ஆண்டுகள், இஸ்லாமிய காலண்டரின் படி 31 ஆண்டுகளுக்கு சமமாகிறது. இஸ்லாமிய காலண்டரின் அடிப்படையில் உழவர்களிடம் வரி வசூல் செய்தால், அவர்கள் 31 ஆண்டுகள் வரி தரவேண்டும். அதிகபடியான ஒரு ஆண்டு வரி அவர்களுக்கு நஷ்டமாக உள்ளது.
எனவே, அரசர் அக்பர், பல நிபுனர்களை நியமித்து, கிரெகோரியன் காலண்டருக்கு இணையான காலண்டரை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாராம்.
இதைப் பற்றிய மேலதி விவரங்களுக்கு கிழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கவும்:
Bangladeshi calendar – https://en.wikipedia.org/wiki/Bangladeshi_calendar & https://www.answering-islam.org/Index/C/calendar.html
உலக நாட்காட்டிகள் பற்றியபல சுவாரஸ்யமான கேள்வி பதில்களை இங்கு காணலாம்: Calendar FAQ
கேள்வி 362: ஜின்கள் என்றால் என்ன? இஸ்லாமுக்கும் ஜின்களுக்கும் என்ன சம்மந்தம்? ஜின்களில் நல்ல கெட்ட ஜின்கள் உள்ளனவா?
பதில் 362: இஸ்லாமின் படி ஜின்கள் என்பவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஆவிகள். இவர்களுக்கு மனிதர்களைப் போல நன்மை தீமைகளை தெரிவு செய்யும் சக்தியுண்டு என்று இஸ்லாம் கூறுகிறது. ஜின் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் (ஸூரா 72) குர்ஆனில் உள்ளது. ஜின்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு விசேஷ ஒற்றுமையுள்ளது. முஸ்லிம்கள் அல்லாஹ்வை நினைப்பதற்கும் அதிகமாக ஜின்களை நினைக்கிறார்கள்.
நானும் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்தபடியினால், என் சிறு வயதில் பெற்றோர்கள், அல்லது மற்றவர்கள் ஜின்கள் பற்றிச் சொல்லும் சுவாரஸ்யம் கலந்த பயம் உண்டாக்கும் விவரங்களைக் கேட்டு மிகவும் பயந்துள்ளேன். மசூதிக்குள்ளும் ஜின்கள் இருக்கும் என்றுச் சொல்வார்கள், எனவே மாலை நேர தொழுகை முடித்துக்கொண்டு வெளியே செல்லும் போது முதலாவதாக நான் இருப்பேன். வீட்டிலே கூட கழிவறைகளில் கெட்ட ஜின்கள் இருப்பதாகச் சொல்லி வைத்தார்கள், இதனால் கழிவறைக்கு செல்வதற்கும் பயப்படுவேன்.
ஜின்கள் பற்றி குர்ஆனும் ஹதீஸ்களும் சொல்லும் விவரங்கள், உங்கள் ஆய்வுக்காக:
ஜின்களை நெருப்பிலிருந்து அல்லாஹ் படைத்தான்: குர்ஆன் 7:12, 15:27, 38:76, 55:15, 6:100
அல்லாஹ்வை வணங்க படைக்கட்டவைகள் ஜின்கள்: குர்ஆன் 51:56
அல்லாஹ் ஒவ்வொரு நபிக்கும் ஜின்களை விரோதிகளாக்கினான்: 6:112.
கியாமத் நாளில் அல்லாஹ் ஜின்களிடம் கேள்வி கேட்பான்: 6:128, 130.
ஜின்களில் அனேகரை நரகத்திற்கென்று அல்லாஹ் படைத்தான்: 7:179, 11:119, 32:13.
மனிதர்கள் ஜின்கள் ஒன்றாக சேர்ந்தாலும், குர்ஆன் போன்ற ஒன்றை கொண்டுவரமுடியாது, அல்லாஹ்வின் சவால்: 17:88
இப்லீஸ் / சைத்தான் ஜின் இனத்தைச் சேர்ந்தவன்: 18:50.
சுலைமான் அரசனுக்கு ஜின்களிலிருந்து படையும், வேலையாட்களும் இருந்தார்கள், தேவாலயம் கட்ட உதவின: 27:17, 34:12.
ஜின்களுக்கு மறைவான ஞானம் இல்லை: 34:14.
ஜின்கள் குர்ஆனை கேட்டு சாட்சி பகிர்ந்தனர்: 46:30, 72:1.
முஸ்லிம்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் கொடுக்கப்போகும் பெண்களை ஜீன்களும் தீண்டாத கன்னிகள்: 55:56, 55:74.
ஜின்னை தூணில் கட்டிப்போட விரும்பிய முஹம்மது, ஆனால் சுலைமான் அரசனுக்காக அதை விட்டுவிட்ட முஹம்மது: புகாரி நூல் எண்: 461, 3423.
பாங்கு சப்தத்தை கேட்கும் ஜின்: புகாரி நூல் எண்: 609, 3296.
முஹம்மது நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள், அனைவரோடும் கூட ஜின்களும் ஸஜ்தா செய்தன: புகாரி நூல் எண்: 1071.
முஹம்மது கூறினார்: வீடுகளில் வசிக்கும் பாம்புகள் ஜின்களாக இருக்கும்: புகாரி நூல் எண்: 3298, 4017.
முஹம்மது கூறினார்: மாலை வேளைகளில் ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும்: புகாரி நூல் எண்: 3316.
ஜின்களுக்கு “முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்” என்று அடையாளப்படுத்திக் கொடுத்தது, ஒரு மரமாகும்: புகாரி நூல் எண்: 3859.
எலும்பும் கெட்டிச் சாணமும் ஜின்களின் உணவு: புகாரி நூல் எண்: 3860.
பெண் ஜின்னும், சஹாபாக்களின் உரையாடலும்: புகாரி நூல் எண்: 3866.
மனிதர்களில் சிலர் 'ஜின்' இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண்டிருந்தனர், ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றனர்: புகாரி நூல் எண்: 4714
ஜின்கள் ஜோதிடர்களுக்கு உதவி செய்கின்றன, சில வேளைகளில் அது உண்மையாகியும் விடுகின்றது: புகாரி நூல் எண்: 5762, 6213.
ஜின்கள் பற்றி இன்னும் அனேக விவரங்கள் இருக்கின்றன, அவைகளை தேவையான இடங்களில் காண்போம்.
கேள்வி 363: காஃபிர் (பன்மை காஃபிரூன்) என்றால் யார்?
பதில் 363: இஸ்லாமின் படி அல்லாஹ்வை வணங்காதவர் காஃபிர் என்று அழைக்கப்படுகின்றார். வேறுவகையில் சொல்வதாக இருந்தால், இஸ்லாமியரல்லாதவர்கள் அனைவரும் காஃபிர்கள் ஆவார்கள். இந்தியாவில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் நாத்தீகர்கள் அனைவரும் முஸ்லிம்களின் படி காஃபிர்கள் ஆவார்கள்.
காஃபிர்கள் பற்றி குர்ஆனும் முஹம்மதுவும் என்ன கூறியுள்ளார்கள், என்பதை சுருக்கமாக இங்கு காண்போம்.
அல்லாஹ்வின் வழியை பின்பற்றாத காஃபிர்கள் நரக வாசிகள்:
குர்ஆன் 2:39. அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.
அல்லாஹ்வை நிராகரித்த கிறிஸ்தவர்களும் கஃபிர்கள் தான்:
குர்ஆன் 5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
ஒரு முஸ்லிமைப் பார்த்து இன்னொரு முஸ்லிம் காஃபிர் என்று அழைத்தால், அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்:
புகாரி எண்: 6103. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி 'காஃபிரே!' (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் கொன்றால், அவன் காஃபிர் (இறைமறுப்பாளன்):
புகாரி எண்: 121. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் 'மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும் படி செய்வீராக!' என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) 'எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்' என்று கூறினார்கள்' என ஜரீர்(ரலி) அறிவித்தார்.
இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம் அனேக கிலோமீட்டர்கள் இருக்கும்:
ஸஹீஹ் புகாரி எண் 6551
6551. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
முஹம்மது நரகம், சொர்கம் பற்றிச் சொல்வதை யாரும் உடனே சரி பார்க்கமுடியாது. இந்த தைரியத்தில் நம்பமுடியாத விஷயங்களை சரளமாக முஹம்மது கூறியுள்ளார். முஹம்மது “(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும்” என்று கூறியுள்ளார். ஒரு மனிதனின் இரண்டு தோள் புஜங்களுக்கு இடையே இருக்கும் தூரம் அனேக கிலோ மீட்டர்கள் இருக்கும் என்று இவர் கூறுகிறார். கடந்த 14 நூற்றாண்டுகளாக இதையும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள். ஒரு ஆரோக்கியமுள்ள மனிதன் துரிதமாக நடந்தால், ஒரு மணிக்கு குறைந்த பட்ச வேகமாகிய 5 கிலோமீட்டர் என்று கணக்கிட்டால், 8 மணி நேரம் நடந்தால் அவன் 40 கிலோ மீட்டர் தொலைவை கடக்கமுடியும். மூன்று நாட்களை கணக்கில் கொண்டால், 40 x 3 = 120 கிலோ மீட்டர். ஒரு மனிதனின் ஒரு புஜத்திற்கும், அடுத்த புஜத்திற்கும் இடையே இருக்கும் தூரம் 120 கிலோ மீட்டர் இருக்குமா? அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும். முஹம்மது குதிரையில் அல்லது ஒட்டகத்தில் பயணிப்பவர் பற்றி சொல்லியிருக்கக்கூடும். இப்படி ஒரு குதிரையில் செல்பவன் கடக்கும் தூரத்தை கணக்கிட்டால், என்னவாகும் இந்த கணக்கு? எங்கேயோ போகும். இப்படியெல்லாம் புதுமையான பொய்களைச் சொல்லி முஹம்மது தன் மார்க்க மக்களை குஷி படுத்தியுள்ளார்.
கேள்வி 364: வேதங்கள் கொடுக்கப்பட்டோர் (அஹல் அல்-கிதாப் – AHL AL-KITAB) என்றால் யார்?
பதில் 364: அஹல் அல்கிதாப் என்றால், வேதம் கொடுக்கப்பட்டோர்கள் என்று யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் குர்ஆன் குறிக்கிறது.
வேதங்கள் கொடுக்கப்பட்டோரிடம் சென்று முஸ்லிம்கள் கற்கவேண்டும்:
குர்ஆன் 21:7. (நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
குர்ஆன் 16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).
முஹம்மதுவிற்கே சந்தேகம் வந்தாமும் வேதம் கொடுக்கப்பட்ட யூத கிறிஸ்தவர்களிடம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவேண்டும்.
குர்ஆன் 10:94. (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது – எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். 10:95. அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.
முஹம்மது தம் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள, தரம் குறைந்த ஒன்றிடம் சென்று சரிபார்க்கும் படி அல்லாஹ் கூறுவானா? நிச்சயம் இல்லை. எனவே யூத கிறிஸ்தவ வேதங்கள் 'இஸ்லாமின் கடைசி நபியின் சந்தேகத்தை' தீர்க்கும் தரமுள்ளது என்று குர்ஆன் சொல்கிறது.
கேள்வி 365: முஜாஹீர்கள் என்றால் யார்?
பதில் 365: அல்லாஹ்விற்காக ஜிஹாதில் ஈடுபடுகிறவர்களை முஜாஹீர்கள் என்பார்கள்.
அரபி வார்த்தை: முஜாஹித் என்பது ஒருமை, முஜாஹிதீன் என்பது பன்மையாகும்.
முஜாஹீர்கள் பற்றி குர்ஆன்:
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
குர்ஆன் 47:31. அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்(IFT) தமிழாக்கம்:
47:31. நாம் உங்களை நிச்சயமாகச் சோதனைக்குள்ளாக்குவோம் உங்கள் நிலைமைகளைப் பரிசீலித்து உங்களில் யார் முஜாஹிதுகள் போராளிகள், நிலைகுலையாது துணிச்சலுடன் இருப்பவர்கள் என்பதை நாம் கண்டறிவதற்காக!
கேள்வி 366: உம்ரா (Umra) என்றால் என்ன?
பதில் 366: உம்ரா என்றால் இஸ்லாமியர்கள் மக்காவிற்குச் செல்லும் புனித யாத்திரையாகும். இதனை சின்ன ஹஜ் என்பார்கள்.
பக்ரீத் மாதத்தில் செல்லும் புனித யாத்திரை ஹஜ் எனப்பபடும், இதர மாதங்களில் செல்லும் புனித யாத்திரையை உம்ரா என்பார்கள். உம்ரா செய்வது குறைவான நன்மைகளைத் தருகிறது, ஹஜ் செய்வது அதிக நன்மைகளைத் தருகிறது என்று இஸ்லாம் கூறுகின்றது.
கேள்வி 367: நபித்தோழர்கள்/சஹாபாக்கள் என்றால் யார்?
பதில் 367: முஹம்மது உயிரோடு இருந்த போது, அவரை நபி என்று நம்பி, அவரோடு கூட இருந்த முஸ்லிம்களை சபாஹாக்கள் என்பார்கள். இவர்களை நபித்தோழர்கள் (Companions) என்றும் அழைப்பார்கள்.
அரபியில்:
“ஸஹாபி” (ṣaḥābiyy) : ஆண் – ஒருமை
“ஸஹாபிய்யாஹ்” (ṣaḥābiyyah) : பெண் – ஒருமை
“ஸஹாபா” (Al-ṣaḥābah) : பன்மை
சஹாபாக்களை பல வகைகளில் பிரிக்கிறார்கள்:
1) முஹாஜிர்கள்: முஹம்மதுவோடு மதினாவிற்கு ஹிஜ்ரா செய்தவர்கள். இவர்கள் மக்காவில் இருக்கும் போதே முஹம்மதுவை நபி என்று நபி இஸ்லாமை தழுவியர்கள்.
2) அன்சார்கள்: மதினாவில் இருந்தவர்கள், முஹம்மதுவை நபியாக ஏற்றுக்கொண்டவர்கள்.
3) பத்ரியூன்: பத்ரு போரில் முஹம்மதுவோடு பங்கு பெற்ற சஹாபாக்கள்.
இப்படி ஒவ்வொரு முக்கியமான உடன்படிக்கை மற்றும் போரில் ஈடுபட்ட சஹாபாக்கள் என்று வகைப்படுத்துகிறார்கள்.
தோராயமாக எத்தனை சஹாபாக்கள்?
முஹம்மதுவோடு மிகவும் நெருங்கிய சஹாபாக்கள் என்று அறிஞர்கள் 50 அல்லது 60 பேரை பட்டியலிட்டுள்ளார்கள். இவர்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமிய சரித்திர நூல்களில் (ibn Sa'd's early Book of the Major Classes. Al-Qurtubi's Istīʻāb fī maʻrifat al-Aṣhāb) மேலும் அனேக சஹாபாக்களின் பெயர்களையும், விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நூல்களில் 2770 ஆண் சஹாபாக்களின் விவரங்களும், 381 பெண் சஹாபாக்களின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது (மூலம்: https://en.wikipedia.org/wiki/Companions_of_the_Prophet).
முஹம்மதுவை நேரடியாக பார்த்தவர்கள் என்று கணக்கிட்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும், அதாவது மக்காவை ஆக்கிரமித்தபோது, 10,000 பேர் மக்காவை நோக்கி சென்றதாக அறியமுடியும், மேலும் போரில் பங்கு பெறாதார்களும் இன்னும் அதிகமாக இருந்திருப்பார்கள்.
சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, முஹம்மதுவை பார்த்தவர்கள், அவரோடு சில காலம் வாழ்ந்தவர்கள் அனைவரையும் சஹாபாக்கள் என்று சொல்லமுடியாது. சஹாபாக்கள் என்றால் அவர்களுக்கென்று சில தனிப்பட்ட குணங்கள் உண்டு என்றுச் சொல்கிறார்கள்.
கேள்வி 368: பனி/பனூ இஸ்ராயீல் (Bani Israel) என்றால் யார்?
பதில் 368: குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் “பனி இஸ்ராயீல்” என்ற சொற்கள் “இஸ்ரவேல்” மக்களைக் குறிக்க பயன்படுத்தட்டுள்ளது. பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள யூதர்களையும், முஹம்மதுவின் காலத்தில் இருந்த யூதர்களைக் குறிக்கவும் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ராயீல் மக்கள் பற்றிய சில குர்ஆன் வசனங்களைக் காண்போம்.
இஸ்ராயீலின் சந்ததியை மேன்மைப்படுத்திய அல்லாஹ்:
2:40. இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.
2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
2:122. (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
இஸ்ராயீல் மக்களுக்கு அல்லாஹ் அத்தாட்சிகளை அனுப்பினான்:
2:211. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
'தவ்ராத்' க்கு முன்பு இஸ்ராயீல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த உணவு கட்டுப்பாடு:
3:93. இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.
ஒருவனை கொலை செய்தால், அனைவரையும் கொலை செய்ததற்கு சமம் என்ற கட்டளை பெற்றவர்கள்:
5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
இஸ்ரேல் நாட்டை சொந்தமாக இஸ்ராயீலுக்கு அல்லாஹ் கொடுத்தான்:
5:21. (தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.
இஸ்ராயீல் மக்களுக்கு வழிகாட்டியாக மூஸாவின் மூலமாக வேதம் கொடுக்கப்பட்டவர்கள்:
17:2. இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
32:23. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவே, அவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்; நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்:
40:53. நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் – அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்:
45:16. நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் – அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.
கேள்வி 369: குர்ஆனை மனனம் செய்தவர்களை என்னவென்று அழைப்பார்கள்?
பதில் 369: குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்தவரை 'ஹஃபிஜ்(Hafiz)' என்று அழைப்பார்கள். இதன் பொருள் பாதுகாவளர் அல்லது மனனமிட்டவர் என்பதாகும்.
ஹுஃப்ஃபாஜ்(Huffaz) என்பது பன்மையாகும். ஹஃபீஜா(Hafiza) என்பது பெண் பால் ஆகும்.
அதாவது ஒரு ஆண் குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்திருந்தால், அவரை ஹஃபீஜ் என்பார்கள், ஒரு பெண் குர்ஆனை மனனம் செய்திருந்தால், அவரை ஹஃபீஜா என்பார்கள்.
இஸ்லாமிய நபி முஹம்மது தனக்கு இறக்கப்பட்ட குர்ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்தார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், இஸ்லாமிய ஆதாரங்களின் படி, பல முறை முஹம்மது குர்ஆன் வசனங்களை மறந்துள்ளார், அந்த நேரத்தில் யாரோ ஒரு நபர் அவருக்கு ஞாபகப்படுத்தியுள்ளார்.
கேள்வி 370: ஈத் உல் ஃபித்ர் (Eid-ul Fitr) என்றால் என்ன? Eid al-Fitr
பதில் 370: ரமலான் மாதத்தின் முதல் நாள் முதற்கொண்டு 30 நாட்கள் தொடர்ந்து நோன்பு இருந்து கடைசியாக கொண்டாடப்படும் இஸ்லாமிய பண்டிகையின் பெயர் தான் “ஈத் அல்-பித்ர்” அல்லது “ஈத் உல்-பித்ர்” என்பதாகும். இதனை ரமலான் / ரம்ஜான் பண்டிகை என்றும் கூறுவர்.
ரமளான் மாதம் நோன்பா? அல்லது விருந்தா?
ஒரு முஸ்லிம் குடும்பத்தில், சாதாரண மாதங்களில் உணவிற்காக ஆகும் செலவை விட, நோன்பு மாதத்தில் (ரமளான்) அதிகமாக செல்வாகிறது. ரமளானில் உணவிற்கு இப்படி செலவு அதிகமானால், இம்மாதத்தை “நோன்பு மாதம்” என்று ஏன் நாம் அழைக்கவேண்டும்? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்த மாதம் “விருந்து மாதம்” என்று அழைக்கலாம், பல வகையான பண்டங்கள், மாமிச உணவுகள் அதிகமாக செலவிடப்படுகின்ற மாதம் இது, இதை நோன்பு மாதம் என்று சொல்வது தவறல்லவா?
கேள்வி 371: அதான் (அஜான், பாங்கு) என்றால் என்ன?
பதில் 371: பாங்கு அல்லது அதான் / அஜான் என்பது முஸ்லிம்கள் தொழுகை தொடங்குவதற்கு முன்பு மசூதிகளிலிருந்து விடுக்கப்படும் அழைப்பு ஆகும். ஒரு நாளில் ஐந்து முறை அதான் விடுக்கப்படும். பாங்கு என்பது பாரசீகச் சொல்லாகும். அதான் என்பது அரபிச் சொல்லாகும். பாங்கு சொல்வதற்காக நியமிக்கப்படுபவரை “முஅத்தின்” என்று அழைப்பார்கள்.
பாங்கு அரபி மொழியில் சொல்லப்படும். பாங்கின் அரபி மற்றும் தமிழாக்கத்தை கீழே காணலாம்:
தொழுகைக்கான அழைப்பு (பாங்கு அல்லது அதான்):
அல்லாஹு அக்பர் (2 முறை) – இறைவன் மிகப் பெரியவன்
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் (2 முறை) – இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்(2 முறை) – முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்
ஹய்ய அலஸ்ஸலாஹ் (2 முறை)– தொழுகைக்கு விரைந்து வாருங்கள்
ஹய்ய அலல்ஃபலாஹ் (2 முறை) – வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் (2 முறை) – இறைவன் மிகப் பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹு – இறைவன் ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை.
அதிகாலை தொழுகைக்காக (சுப்ஹ்) அழைப்பு விடும்போது கீழ்வரும் வரிகளை இணைத்து அழைப்பு விடுவர்.
அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம்(2 முறை) – தூக்கத்தை விடத் தொழுகை மேலானது
மூலம்: ta.wikipedia.org/s/k76
அதான் பின்னணி: பாங்கு சொல்வது எப்போது தொடங்கப்பட்டது?
புகாரி நூல் எண்: 604
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர்.
அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர்.
வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர்.
அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்' என்று நபி(ஸல்) கூறினார்கள்..
பாங்கு சொல்வதைப் பற்றிய முஹம்மதுவின் கட்டுக்கதை: ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான்
முஹம்மது எப்படியெல்லாம் மக்களை முட்டாள்களாக்க முடியுமோ, அப்படியெல்லாம் பொய்களைச் சொல்லி அவர்களை முட்டாள்களாக்கியுள்ளார். தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இப்படி முஹம்மது கூறியுள்ளார். சாத்தான் இப்படியெல்லாம் காற்றுவிட்டவனாக ஓடுவானா? இது அறிவுடமையா? உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மசூதிகளில் பாங்கு சொல்லும் போது, ஒரே நேரத்தில் எப்படி சாத்தான் எல்லா இடங்களிலும் காற்றுவிட்டவனாக ஓடமுடியும்? இது உண்மையென்றால், சாத்தான் அல்லாஹ்வைப் போன்று சர்வவியாபியாக இருக்கிறான் என்று அர்த்தம். இப்படி கட்டுக்கதைகளைச் சொல்லி மக்களை முஹம்மது ஏமாற்றியுள்ளார். இவரை நபி என்று நாம் கூறினால், இது மிகப்பெரிய பாவமாக இருக்கும்.
ஸஹீஹ் புகாரி எண் 1231.
1231 'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கேள்வி 372: அமீனா (Aminah) என்ற பெண்மணி யார்?
பதில் 372: இந்த பெண்மணி, வஹாப் என்பவரின் மகளாவார்கள். இவர் அப்துல்லாஹ்வின் மனைவியும், முஹம்மதுவின் தாய் ஆவார்கள். இவர்கள் முஹம்மதுவிற்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத நிலையில் இருந்தபடியால், ஹலிமா என்ற ஒரு பெண்ணிடம் முஹம்மதுவை கொடுத்து பாலூட்டச் சொன்னார்கள். அமீனா அவர்கள் முஹம்மதுவிற்கு ஆறு வயது இருக்கும் போது காலமானார்கள். அதன் பிறகு முஹம்மதுவை அவருடைய தாத்தா அப்துல் முத்தாலிபும், அதன் பிறகு அபூ தாலிப்பும் முஹம்மதுவை வளர்த்து வந்தார்கள்.
முஹம்மதுவின் தாயும் தந்தையும் நரகத்தில் இருப்பார்கள்:
தம்முடைய தாயும் தந்தையும் நரகத்தில் இருப்பார்கள் என்று முஹம்மது கூறியுள்ளார், முஸ்லிம் நூல் இதனை பதிவு செய்துள்ளது.
1777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
347. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.
கேள்வி 373: அர்ஷ் (Al-ʿArsh) என்பது என்ன?
பதில் 373: அல்லாஹ் உட்கார்ந்து இருக்கும் சிம்மாசனத்திற்கு “அர்ஷ்” என்று பெயர்.
அல்லாஹ்வின் நாற்காலி அர்ஷ் தண்ணீர் மீது அமைந்துள்ளது:
குர்ஆன் 11:7. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அதற்கு முன்னர் அவனுடைய அர்ஷ்* நீரின் மீது இருந்தது எதற்காகவெனில் உங்களில் யார் நற்செயல் புரியக்கூடியவர் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக! இப்போது நபியே! நீர் மக்களிடம் “நீங்கள் மரணமடைந்த பின் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள்!” என்று கூறினால் இறைநிராகரிப்பாளர்கள் உடனே கூறுவார்கள்: “இது வெளிப்படையான சூனியமே அன்றி வேறில்லை.”
குர்ஆன் 7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் – அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு – ஆட்சிக்குக் – கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
கேள்வி 374: அரஃபத் என்பது இடத்தின் பெயரா அல்லது மனிதர்களின் பெயரா?
பதில் 374: அரஃபத் என்பது மக்காவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தின் பெயராகும். இதைப் பற்றி குர்ஆனிலும் கீழ்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
இஸ்லாமிய புனித பயணம் செய்யும் முஸ்லிம்கள், இந்த அரஃபத் பகுதியில் உள்ள மலையில் வந்து ஒரு நாள் தங்கி, தங்கள் பாவங்களை மன்னிக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுவார்கள். ஹஜ் செய்பவர்கள் இங்கு வந்து இப்படி செய்யவில்லையென்றால், அவர்களின் ஹஜ் என்பது முழுமைப்பெறாது என்றும் சொல்லப்படுகின்றது.
புகாரி நூல் எண்: 4520:
4520. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறையுயரும் அவர்களின் மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் – புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) 'உறுதிமிக்கவர்கள்' எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9 வது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் 'மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்' எனும் (திருக்குர்ஆன் 02:199 வது) இறைவசனமாகும்.
முஹம்மது தம்முடைய கடைசி பிரசங்கத்தி இந்த மலையிலிருந்து கொடுத்தார் என்று இஸ்லாம் சொல்கிறது.
புகாரி நூல் எண்: 1739
1739. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'மக்களே! இது எந்த நாள்?' எனக் கேட்டார்கள். மக்கள் 'புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இது எந்த நகரம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் 'இது எந்த மாதம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க மாதம்!' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!' எனப் பல முறை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, 'இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?' என்றும் கூறினார்கள். என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அ(வ்விறை)வன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும். பின்னர் 'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த கேட்டேன்' என்ற வாக்கியம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
குறிப்பு: யாசெர் அரஃபத்(Arafat, Yasser) என்ற பெயரில் ஒரு நபரும் இருந்தார், இவர் “பலஸ்தீன விடுதலை இயக்கத்தின்(PLO)” தலைவராக இருந்தார். இஸ்ரேல் நாட்டுடன் விடுதலைக்காக போராடிய இயக்கமாகும் இது. இவரைப் பற்றி வேறு ஒரு கேள்வியில் காண்போம்.
கேள்வி 375: ஷம்ஸ் என்ற அரபி வார்த்தையின் பொருள் என்ன?
பதில் 375: அரபி வார்த்தை “ஷம்ஸ்” என்பதன் பொருள் “சூரியன்” என்பதாகும். குர்ஆனின் 91வது ஸூராவிற்கு (அத்தியாயத்திற்கு) ஷம்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
“ஷம்ஸுத்தீன்” என்ற பெயரை முஸ்லிம்கள் வைத்திருப்பதை நாம் காணலாம். இந்த பெயர் இரண்டு வார்த்தைகளின் கூட்டு ஆகும்.
“ஷம்ஸ்” என்றால் சூரியன், “தீன்” என்றால் “மதம்” என்று பொருள் முக்கியமாக இஸ்லாம் என்று கூறலாம். ஆக ஷம்ஸுத்தீன் என்றால், “மதத்தின் சூரியன்” என்று பொருள். சில இஸ்லாமிய அறிஞர்கள் “தீன்” என்ற வார்த்தையை பெயர்களில் பயன்படுத்தவேண்டாம் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.
கேள்வி 376: இத்தா (Iddah) என்றால் என்ன? ஏன் இஸ்லாமிய பெண்களுக்கு இத்தா நாட்கள் கொடுக்கப்படுகின்றன?
பதில் 376: இத்தா (காத்திருக்கும் காலம்) என்பது ஒரு பெண் தன் கணவரின் மரணத்திற்குப் பிறகு அல்லது விவாகரத்துக்குப் பிறகு, அடுத்த திருமணம் செய்யாமல் “காத்திருக்கும் காலமாகும்”. அந்த சமயத்தில் அவள் வேறொரு ஆணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
இந்த இத்தா காலம் காத்திருக்காமல், அந்தப்பெண் வேறு ஆணை திருமணம் செய்துக்கொண்டால், அதன் பிறகு இவள் கர்ப்பமானால், அந்த பிள்ளையின் தந்தை யார்? என்ற கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் இந்த “காத்திருக்கும் காலம்” நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்தாவின் விதிவிலக்கு:
கீழ்கண்ட வசனத்தில் “ஒரு பெண்ணை திருமணம் செய்த பிறகு, அவர்கள் உடலுறவு கொள்வதற்கு முன்பாக, கணவன் விவாகரத்து செய்துவிட்டால், இந்த இத்தா காலம் தேவையற்றது” என்று குர்ஆன் சொல்கிறது.
33:49. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே “தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை – ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
மூன்று வகையான பெண்களுக்கு இத்தா காலம்
கீழ்கண்ட வசனத்தை கவனிக்கவும்:
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
65:4. (தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கையிழந்து, (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டால், அத்தகைய பெண்களுக்கும், இன்னும் எவர்களுக்கு இதுவரையில் மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும், இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையில் இருக்கின்றது. எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகின்றான்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
65:4. உங்கள் பெண்களில், எவர்கள் ‘இனி மாதவிலக்கு வராது’ என்று நம்பிக்கையிழந்து விட்டிருக்கின்றார்களோ அவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், (நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களுடைய இத்தாகாலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு வரவில்லையோ அவர்களுக்கான விதிமுறையும் இதுவே! மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன் முடிகின்றது. யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய விவகாரத்தில் அல்லாஹ் இலகுவை ஏற்படுத்தியிருக்கின்றான்.
மூன்று வகையான பெண்களுக்கு இத்தா காலம் நியமிக்கப்பட்டுள்ளது:
1) வயது காரணமாக “இனி மாதவிலக்கு வராது” என்ற நிலையில் இருக்கும் பெண்கள்: மூன்று மாதங்கள் காத்திருப்பு காலமாகும்.
2) இதுவரையில் மாதவிலக்கு வராத பெண்கள்/சிறுமிகள்: மூன்று மாதங்கள் காத்திருப்பு காலமாகும்.
3) கர்ப்பிணிப்பெண்கள்: குழந்தை பிறக்கும் வரையில் காத்திருப்பு காலமாகும்.
வயதுக்கு வராத சிறுமிகளை திருமணம் செய்து, அவர்களோடு உடலுறவு கொல்ல அல்லாஹ் அனுமதிக்கிறான்:
அல்லாஹ் மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் சிறுமிகளாக இருக்கும் பெண் குழந்தைகளை திருமணம் செய்ய அனுமதி அளித்துள்ளான். இது ஒரு சமுதாய கேடு ஆகும். ஒரு பெண் குழந்தை தனக்கு ஆறு அல்லது ஏழூ வயது இருக்கும் போது, எப்படி ஒரு ஆணை திருமணம் செய்துக்கொள்ள முடியும்? அவளோடு உடலுறவு கொள்வது தவறானதல்லவா? அவளுக்கு கணவன், மனைவி, குடும்பம் போன்ற விவரங்கள் பற்றி எந்த ஒரு அறிவும் இல்லாத போது, அக்குழந்தையில் உடலும் திருமணத்திற்கு (முக்கியமாக உடலுறவுக்கு) தயாராக இல்லாத போது, ஏன் அல்லாஹ் இப்படிப்பட்ட 'சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும்' சட்டங்களை இயற்றியுள்ளான்?
அல்லாஹ்வின் இப்படிப்பட்ட கட்டளையினால் தான் இஸ்லாமிய நாடுகளில் அதிக வயதுள்ள ஆண்கள், வயதுக்கு வராத சிறுமிகளை திருமணம் செய்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சிறுமிகளை விவாகரத்து செய்துவிட்டால், அவர்கள் எத்தனை நாட்கள் இத்தா இருக்கவேண்டும் என்று குர்ஆனும் மேற்கண்டவிதமாக கட்டளையிட்டுள்ளது.
நாகரீகமடைந்த எந்த சமுதாயமும் சமுதாயத்திற்கு கேடுவிளைவிக்கும் இப்படிப்பட்ட கட்டளைகளை எப்படி ஏற்றுக்கொள்ளும்?
கேள்வி 377: இஹ்ராம் என்றால் என்ன?
பதில் 377: இஹ்ராம் என்பது மக்காவிற்கு ஹஜ்/உம்ரா புனிதப் பயணம் செல்லும் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் ஆகும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்தபின் ஹஜ்/உம்ரா பயணத்தின் குறிப்பிட்ட கடமைகளை நிறைவேற்றி முடிப்பது வரை அவர்களின் உடை, நடத்தை, சிந்தனை ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். இதற்கு 'இஹ்ராம்' என்று பெயர்.
இதைப் பற்றிய மேலதிக கட்டுப்பாட்டு விவரங்களை கீழ்கண்ட தொடுப்பில் பார்க்கலாம்: en.wikipedia.org/wiki/Ihram
இஹ்ராமின் போது செய்யக்கூடாதவை:
2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
5:1. முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
இஹ்ராமின் போது கடலில் வேட்டையாடலாம்:
5:96. உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக – ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
இஹ்ராமின் போது அல்லாஹ்வின் சோதனை:
5:94. ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
இஹ்ராம் பற்றிய சில கேள்விகளுக்கு முஹம்மதுவின் பதில்:
புகாரி நூல் எண்: 366:
366. 'ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் எந்த ஆடையை அணிய வேண்டும் என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. யாருக்காவது செருப்பு கிடைக்காமலிருந்தால் தோலினாலான காலுறை அணிந்து கொள்ளலாம். அந்தத் தோலுறையில் கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
கேள்வி 378: ஈத் அல்-அதா (Eid al-Adha) என்றால் என்ன?
பதில் 378: ஈத் அல் அதா என்பது முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். இதற்கு தியாகத்திருநாள் என்றும் ஒரு பெயர் உண்டு. மேலும் இந்த பண்டிகையில் ஆடுகளையும், மாடுகளையும் பலியிடுவதினால், உருது மொழியில் இதனை பக்ரீத் பண்டிகை (பக்ரா என்றால் ஆடு, ஈத் என்றால் பண்டிகை) என்று கூட அழைக்கிறார்கள். இதனால் தமிழ் நாட்டிலும் பக்ரீத பண்டிகை என்றும் அழைக்கிறார்கள்.
இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் (Dul Haji) 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
இந்த பண்டிகையின் போது தான் ஹஜ் என்ற மக்காவிற்குச் செல்லும் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படுகின்றது.
பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதாவது ஆபிரகாம் (இப்றாஹீம்) தன் மகனை பலியிட கொண்டுச் சென்ற அந்த தியாக நிகழ்ச்சியை நினைவு கூறும் நாளாக இது உள்ளது. எனவே இதற்கு தியாகத்திருநாள் என்று அழைக்கிறார்கள்.
இப்றாஹீம் பலியிட கொண்டுச் சென்றது இஸ்மாயீலையா? அல்லது ஈஷாக்கையா?
முஸ்லிம்களின் கூற்றுப்படி இப்றாஹீம் பலியிட கொண்டுச் சென்றது இஸ்மாயீலைத்தான், ஆனால் பைபிளும் குர்ஆனும் இப்படி சொல்லவே இல்லை, இதற்கான சுருக்கமான பதிலைப் பார்ப்போம்.
முஸ்லிம்களில் பலரின் குற்றச்சாட்டு என்னவென்றால், இஸ்லாமுக்கு கலங்கம் விளைவிக்கவேண்டும் என்பதற்காக பைபிளில் மாற்றம் செய்யப்பட்டது, ஆபிரகாமின் கதையில் முக்கியமாக தன்னுடைய மகனை பலியிட இறைவன் சொன்ன விஷயத்தில் மாற்றம் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள். பலியிட தேவன் சொன்ன மகன் இஸ்மவேல் ஆவார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், பைபிள் அந்த மகன் ஈசாக்கு என்று தெளிவாக கூறுகிறது (ஆதியாகமம் 22:9, எபிரேயர் 11:17 மற்றும் யாக்கோபு 2:21 வசனங்களை படிக்கவும்.)
முழு குர்-ஆனில் ஒரே ஒரு இடத்தில் இந்த விவரம் பற்றி கூறப்பட்டுள்ளது, அதுவும் ஆபிரகாமின் வேண்டுதலாக அது ஆரம்பிக்கிறது. அதாவது தனக்கு ஒரு மகன் கொடுக்கும்படி இறைவனிடம் அவர் வேண்டுகிறார். அந்த குர்-ஆன் வசனங்களை இங்கு படியுங்கள்.
மேலும், அவர் கூறினார்; “நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.” “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை “யா இப்றாஹீம்!” என்றழைத்தோம். “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.” ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம். (37:99 -107)
மேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள், அதாவது பலியிடச்சென்ற மகன் பற்றி குர்-ஆனில் வரும் ஒரே ஒரு இடம் இது தான். மேலும், அந்த ஒரு இடத்திலும் எந்த மகன், அவன் பெயர் என்ன என்ற விவரங்கள் குர்-ஆனில் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஒரு விஷயம் குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது, அது என்னவென்றால், இந்த மகன் “ஒரு நற்செய்தியாக” தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கப்பட்டவர் ஆவார். ஒருவர் முழு குர்-ஆனை தேடிப்பார்த்தாலும், இஸ்மவேலின் பிறப்பு பற்றி எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கமுடியும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இஸ்மவேல் பற்றி மிகக்குறைவாக குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது. மேலும் இஸ்மவேலின் தாய் பற்றியோ அல்லது இஸ்மவேலின் பிள்ளைகள் பற்றியோ எதுவும் குர்-ஆனில் கூறப்படவில்லை. முக்கியமாக, இஸ்மவேலின் தாயின் பெயர் ஆகார் என்றும் மேலும் அவருக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும் நாம் பைபிளிலிருந்து அறிகிறோம் (ஆதியாகமம் 25:12-17). நாம் மேலே குறிப்பிட்ட “நற்செய்தி” பற்றிய குர்-ஆன் வசனம் பற்றி நம் கவனத்தை திருப்புவோம். ஈசாக்கு மற்றும் அவரது தாயார் சாராள் பற்றி குர்-ஆனில் கீழ்கண்ட விதமாக நாம் படிக்கிறோம்.
இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; “உங்களுக்கு) “ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். . . . , பயப்படாதீர்!” எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர். பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார். (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள். (குர்-ஆன் 51:24-25, 28-30)
மேற்கண்ட வசனங்களுக்கு மேலதிகமாக, ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு பற்றிய ஒரு சுருக்கத்தை நாம் கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களில் காண்கிறோம்:
“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)! இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம். இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; . . . . (குர்-ஆன் 37:109 – 113)
மேற்கண்ட குர்-ஆன் வசனங்களில் வரும் சொற்றொடர்களாகிய “அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்” என்பதையும் “ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.” என்பதையும் கூர்ந்து கவனியுங்கள். குர்-ஆனிலே இப்படிப்பட்ட “நன்மாராயங் கூறுவதாக” இஸ்மவேலின் பிறப்பு பற்றி கூறப்படவில்லை. இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்து இருக்கும் அதாவது குர்-ஆனில் “நன்மாராங் கூறி” பிறந்தவர் இஸ்மவேல் அல்ல அவர் ஈசாக்கு ஆவார் மேலும் ஈசாக்கே பலியிட கொண்டுப் போகப்பட்டவராவார் (குர்-ஆன் 37:99-107). மேலும் பைபிள் கூறுவது போல ஈசாக்கு தான் பலியிட கொண்டுபோகப்பட்டார்.
முஸ்லிம்களில் அனேகர், குர்-ஆனை முழுவதுமாக ஆய்வு செய்து, “ஆம் குர்-ஆன் குறிப்பிடுவதும் ஈசாக்கைத் தான்” என்று முடிவிற்கு வந்துள்ளார்கள். யூசுஃப் அலி என்ற இஸ்லாமிய அறிஞர், தம்முடைய குர்-ஆன் மொழியாக்கத்தின் விளக்கத்தில் (பக்கம் 1204, குறிப்பு 4096), கீழ்கண்டவாறு ஒப்புக்கொள்கிறார்:
“The boy thus born was according to Muslim tradition (which however is not unanimous on this point) the first-born of Abraham viz. Ismail.”
முஸ்லிம் பாரம்பரியத்தின் படி (இதில் எல்லாரும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கவில்லை) ஆபிரகாமின் முத்த மகனாகிய இஸ்மவேல் தான் அந்த மகன்”
“முஸ்லிம் பாரம்பரியத்தின் படி” என்ற சொற்றொடர்களையும் “இதில் எல்லாரும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கவில்லை” என்ற சொற்களையும் கவனியுங்கள். இதன் மூலம் தெள்ளத்தெளிவாக அறிவது என்னவென்றால், குர்-ஆனின் படி “இஸ்மவேல்” பலியிட கொண்டுபோகப்படவில்லை என்பதாகும். மேலும் குர்-ஆன் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது முந்தைய வேதங்களை மெய்ப்பிக்கும்படி குர்-ஆன் வந்ததே தவிர அவைகளுக்கு எதிராக முரண்பட அல்ல என்று குர்-ஆனே சொல்வதை கவனிக்கவும். இதன் படி தெரிவது என்னவென்றால் பைபிளில் சொல்லப்பட்டவைகளை ஏகோபித்து குர்-ஆன் இந்த விஷயத்தில் முன்மொழிகிறது, ஆனால், இஸ்லாமிய பாரம்பரியங்கள் முரண்படுகின்றன. (மூலம்: இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்)
கேள்வி 379: குர்பானி (பலி) என்றால் என்ன?
பதில் 379: பக்ரீத் பண்டிகையின் போது கொடுக்கப்படும் ஆடு/மாடு/ஒட்டக பலியை அரபியில் “குர்பானி” என்பார்கள்.
எபிரேய மொழியில் “கொர்பான்” என்ற வார்த்தையும் இதைச் சுற்றியே உள்ளது. கொர்பான் என்ற எபிரேய வார்த்தையின் பொருள் காணிக்கை(Offering), மிருகங்களை பலியிடுதல் என்பதாகும்.
இந்த வார்த்தை மூன்று இடங்களில் குர்ஆனில் வருகிறது:
குர்ஆன் 3:183. மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.
குர்ஆன் 5:27. (நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
குர்ஆன் 46:28. (அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் – அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியவையும், இட்டுக் கட்டியவையுமாகும்.
மேற்கண்ட வசனத்தில் (46:28), அல்லாஹ்விடம் “நெருங்க” என்ற பொருளில் குர்பானி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி 380: ஈமான் (Faith) என்றால் என்ன?
பதில் 380: இஸ்லாமில் ஈமான் என்ற அரபி வார்த்தையின் அர்த்தம் 'நம்பிக்கை, விசுவாசம் (Faith)' என்பதாகும்.
ஒருவர் முஸ்லிமாக இருக்க கீழ்கண்ட ஆறு காரியங்கள் மீது ஈமான்(நம்பிக்கை)கொள்ளவேண்டும்.
1) அல்லாஹ்வின் மீதும் அவன் ஒருவன் என்றும் நம்பவேண்டும்
2) தேவ தூதர்கள் இருக்கிறார்கள் என்று நம்பவேண்டும்
3) வேதங்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் (மூஸாவிற்கு தவ்ராத், தாவூதுக்கு ஜபூர், இயேசுவிற்கு இன்ஜில், முஹம்மதுவிற்கு குர்ஆன் கொடுக்கப்பட்ட வேதங்கள் என்று நம்பவேண்டும்)
4) நபிகளை/தீர்க்கதரிசிகளை நம்பவேண்டும் (முஹம்மது கடைசி நபி என்று நம்பவேண்டும்)
5) நியாயத்தீர்ப்பு நாளை நம்பவேண்டும்
6) விதியை நம்பவேண்டும் (நல்லதோ கெட்டதோ அதை அல்லாஹ் நிர்ணயித்துவிட்டான், அதுபடியே நடக்கும் என்பதை நம்பவேண்டும்)
முஸ்லிம் நூல் எண்: 7
7. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), என்னிடம் (விளக்கம்) கேளுங்கள்” என்று கூறினார்கள். . . . அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?” என்று அம்மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நீங்கள் நம்புவதும்,விதியை முழுமையாக நம்புவதும் ஆகும்” என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மை தான்” என்றார்.
இவைகள் மட்டுமல்லாமல், இன்னும் பல காரியங்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.
முஸ்லிம் நூல் எண்: 57 & 58
57. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
58. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான” அல்லது “அறுபதுக்கும் அதிகமான” கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கேள்வி 381: இலா (ilah) என்றால் என்ன?
பதில் 381: அரபி மொழியில் 'இலா(Ilash)” என்றால் “கடவுள், இறைவன்” என்று பொருள். “அல்லாஹ்” என்ற வார்த்தையும் இவ்வார்த்தையிலிருந்து வந்தது என்று நம்புகிறார்கள்.
அல் + இலா என்பது தான் “அல்லாஹ்” என்று மாறியிருக்கும் என்றும் நம்பப்படுகிறது. “அல்” என்றால் “The” என்று பொருள், “இலா(Ilah)” என்றால் இறைவன்(god) என்று பொருள். ஆக, அல்லாஹ் என்றால் “The god” என்று மாறியிருக்கலாம் என்ற நம்பப்படுகிறது.
இஸ்லாமிய விசுவாச அறிக்கையின் முதல் வாக்கியம்:
“லா இலாஹ இல்லல்லாஹு” என்றால்
“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் (இலா) இல்லை என்பதாகும்.
இதில் “இலா(Ilah)” என்ற சொல்லும் வருகிறது, “அல்லாஹ்(Allah)” என்ற சொல்லும் வருகிறது என்பதை கவனிக்கவும்.’
எபிரேய வார்த்தை எல் (El):
எபிரேய மொழியிலும் “எல்(EL)” என்ற வார்த்தை உண்டு, அதற்கும் பொருள் “இறைவன், கடவுள்” என்று பொருள்.
கேள்வி 382: மன்னு, ஸல்வா என்றால் என்ன?
பதில் 382: இஸ்ரேல் மக்கள் எகிப்திலிருந்து இஸ்ரேல் நாட்டிற்கு மூஸா அழைத்துச் சென்ற போது, அவர்களுக்காக வானத்திலிருந்து இறைவன் கொடுத்த உணவு தான் மன்னு மற்றும் ஸல்வா ஆகும்.
பைபிளில் “மன்னா” என்ற அழைக்கப்பட்ட உணவு தான், குர்ஆனில் “மன்னு” என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். “ஸல்வா” என்றால் “காடைகள்” என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இதைப் பற்றி குர்ஆனில் மூன்று இடங்களில் வருகிறது (குர்ஆன் 2:57, 7:160,20:80):
2:57. இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
7:160. மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து : “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
20:80. “இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய் மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும் “மன்னு ஸல்வாவை” (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்.
சமையள் காளானும், மன்னுவும்:
சமையளுக்கு பயன்படுத்தும் காளான் “மன்னு” வகையைச் சார்ந்ததாக முஹம்மது கூறியுள்ளார், உண்மையில் மன்னு என்பது இறைவன் வானத்திலிருந்து கொடுத்த ஒருவகையான உணவாகும், இதை காளானுக்கு ஒப்பிட்டு முஹம்மது பேசியுள்ளார். இது தவறான கூற்றாகும். காளான் மண்ணில் முளைக்கும் உணவுப்பண்டம், மன்னு (மன்னா) வானத்திலிருந்து இறைவன் கொடுத்தது. முஹம்மதுடம் ஒரு பழக்கம் உண்டு, எதை கேட்டாலும் சரி, ஏதோ ஒரு பதிலை சொல்லிவிடுவார்.
நூல் புகாரி: எண்கள் 4478, 4639, 4778, 5708
4478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
கேள்வி 383: ஷிர்க் (SHIRK) என்றால் என்ன?
பதில் 383: இஸ்லாமின் படி, “மன்னிக்கப்படாத பாவத்தை/குற்றத்தை” ஷிர்க் என்பார்கள். உதாரணத்திற்கு, அல்லாஹ்விற்கு இணை வைப்பது (அல்லாஹ்விற்கு இணையாக இன்னொருவரை கருதுவது) ஷிர்க் ஆகும்.
குர்-ஆன் 4:48, 137 மற்றும் 47:34ன் படி இணைவைப்பவர்கள் அல்லாஹ்வினால் மன்னிக்கப்படமாட்டார்கள்.
இயேசுவை இறைவனென்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றபடியால், குர்-ஆன் அவர்களை “இஸ்லாமிய நம்பிக்கையற்றவர்கள் (காஃபிரூன்) என்றும், இணைவைப்பவர்கள் (முஷ்ரிகூன்) என்றும்” குற்றம் சாட்டுகிறது.
குர்-ஆன் 9:30 – 33
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
ஷிர்க் பற்றிய விவரங்கள் அடங்கிய சில கட்டுரைகள்:
ஆங்கிலக் கட்டுரைகள்:
ஷிர்க என்ற பாவம் செய்தவர்களை அல்லாஹ் மன்னிப்பானா?
ஷிர்க் என்ற பாவத்தை செய்த முஹம்மது?
டாக்டர் ஜமால் பதாவி அறிஞரும் மற்றும் ஷிர்க் என்ற பாவமும்
குர்ஆனின் படி யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஷ்ரிக்குகளா?
ஒரு பொதுவான வார்த்தை
ஆதாம் ஏவாள்: குர்ஆனின் படி ஷிர்க் என்ற பாவத்தைச் செய்த முதல் மனிதர்கள்
தமிழ் கட்டுரைகள்:
கேள்வி 384: ஹராம் (HARAM) என்றால் என்ன?
பதில் 384: ஹராம் என்றால் இஸ்லாமிய சட்டத்தில் “தடுக்கப்பட்டவைகள்” என்று பொருளாகும். இந்த வார்த்தையின் எதிர்ச் சொல் “ஹலால்” ஆகும்.
இஸ்லாமின் சில ஹராம்கள்:
உணவில் ஹராம்:
2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.
6:119. அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் – ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது:
6:56. “நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்” (என்று நபியே!) நீர் கூறுவீராக: “உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கு இடையே ஹலால்/ஹராம் பற்றிய தொடர் கட்டுரைகளை கீழே படிக்கலாம்:
இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம்:
கேள்வி 385: ஹலால் (HALAL) என்றால் என்ன?
பதில் 385: குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் (இஸ்லாமிய) சட்டப்படி ஹலால் என்றால் “அனுமதிக்கப்பட்டவைகள்” என்று பொருள். அதாவது இஸ்லாமியர்கள் பயன்படுத்தவோ அல்லது உட்கொள்ளவோ அல்லது உடுத்தவோ அனுமதிக்கப்பட்ட பொருட்களை “ஹலால் பொருட்கள்” என்பார்கள். இதே போல, இஸ்லாமில் அனுமதிக்கப்படாதவைகளை “ஹராம்” என்றுச் சொல்வார்கள்.
ஆனால், ஹலால் பட்டியலில் எவைகள் வருகின்றன, ஹராம் பட்டியலில் எவைகள் வருகின்றன என்பதைக் குறித்து இஸ்லாமிய பிரிவுகளில் ஒருமித்த கருத்து இல்லை. ஒவ்வொரு பிரிவினரும் வெவ்வேறு பட்டியலைத் தருவார்கள்.
இயேசுவும் முஹம்மதுவும் ஒரே செய்தியைத் தான் போதித்தார்கள் என்று முஸ்லிம்கள் சொல்வார்கள், ஆனால், இவ்விருவரின் போதனைகளை ஆய்வு செய்தால், அடிப்படை விஷயங்கள் தொடங்கி, தொழுகை வரை, இயேசு ஹலால் என்று போதித்தவைகளை முஹம்மது ஹராம் என்று போதனை செய்துள்ளார் என்பதை கவனிக்கமுடியும்.
இந்த தலைப்பில் எழுதப்பட்ட 12 ஆய்வுக் கட்டுரைகளை இங்கு தருகிறேன் படிக்கவும்.
இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம்:
கிறிஸ்தவர்கள் சிந்திக்க ஒரு வசனம்:
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். (1 கொரிந்தியர் 10:23-24)
கேள்வி 386: உம்மா (Ummah) என்றால் என்ன?
பதில் 386: அரபியில் உம்மா என்றால், ஒரு சமுதாயம் என்று பொருள். இஸ்லாமை பொறுத்தமட்டில், பொதுவாக “உம்மா” என்றால் இஸ்லாமிய சமுதாயத்தை குறிக்கும். இஸ்லாமிய சமுதாயத்தை குறிக்க அரபியில் “உம்மத் அல் இஸ்லாம்(ummat al-Islām)” என்றும் கூறுவார்கள்.
உம்மா என்ற வார்த்தை பல வடிவங்களில் குர்ஆனில் 62 முறை வருவதாக கூறப்படுகிறது. கீழ்கண்ட வசனத்தில் “சமுதாயம்” என்ற வார்த்தைக்கு அரபியில் “உம்மா” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது;
குர்ஆன் 23:51. (நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்) 23:52. “இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
கேள்வி 387: கிப்லா (தொழும் திசை – Qibla) என்றால் என்ன?
பதில் 387: இஸ்லாமில் “கிப்லா” முக்கிய இடத்தை பிடித்துள்ளது. முஸ்லிம்கள் தொழுகை செய்யும் போது, ஒரு திசையை நோக்கி தொழுதுக்கொள்வார்கள், அந்த திசைக்கு கிப்லா என்பார்கள்.
முஸ்லிம்கள் உலகில் எந்த பகுதியில் வாழ்பவராக இருந்தாலும் சரி, அவர்கள் நமாஜ் (தொழுகை) செய்யும் போது, தங்கள் முகங்களை சௌதி அரேபியாவில் உள்ள மக்கா நகரத்திற்கு நேராக திருப்பிக்கொண்டு தொழவேண்டும். மக்கா நகரத்தில் தான் “காபா” என்ற ஆலயம் உள்ளது என்பதால், முஸ்லிம்கள் கேள்வி கேட்காமல் அதன் பக்கம் திரும்பியே தொழவேண்டும். உலகின் மசூதிகள் அனைத்தும், இதன் அடிப்படையில் தான் கட்டப்படுகின்றன.
உதாரணத்திற்கு:
தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தொழும்போது, வடக்கு நோக்கி (கிப்லா) தொழுவார்கள்.
அமெரிகாவில் உள்ளவர்கள், கிழக்கு நோக்கி தொழுவார்கள், ஏனென்றால் அமேரிக்காவிற்கு கிழக்கில் சௌதி அரேபியா (மக்காவும், காபாவும்) இருப்பதினால்.
மக்காவிற்கு புனித ஹஜ் பயணம் செய்யும் போது, காபாவை நோக்கி முஸ்லிம்கள் 360 டிகிரியில் தொழுவதைக் காணலாம்.
சில வேளைகளில் கிப்லா திசை எது என்று முஸ்லிம்களுக்கு தெரியாத பட்சத்தில் அதாவது ஹோட்டல்களில், விமான நிலையங்களில் “கிப்லா இந்த பக்கம்” உள்ளது என்ற அடையாளத்தை முஸ்லிம்கள் அறிவிப்பு பலகையாக எழுதி வைத்திருப்பார்கள். அதைப் பார்த்து முஸ்லிம்கள் தொழுவார்கள்.
முதல் 12 ஆண்டுகள் முஹம்மதுவும் முஸ்லிம்களும் எருசலேமை நோக்கியே தொழுதார்களா?
ஆம், முஹம்மதுவிற்கு கிபி 610ல் முதல் குர்ஆன் வசனம் இறங்கிய காலம் தொடங்கி, அவர் மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த பிறகு கூட, 1.5 ஆண்டுகள் மதினாவில், அவரும் மற்றும் அனைத்து முஸ்லிம்களும் எருசலேமையே தங்கள் கிப்லா (வணக்க திசையாக) வைத்து தொழுகை புரிந்தார்கள்.
கீழ்கண்ட வசனத்தின் மூலமாக கிப்லா மாற்றப்பட்டது:
ஸூரா 2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
ஏன் கிப்லா மாற்றப்பட்டது?
ஆரம்பத்தில் “யூதர்களும் கிறிஸ்தவர்களும்” தன்னை நபியாக ஏற்பார்கள் என்று முஹம்மது எதிர்ப்பார்த்தார். மக்காவில் இறங்கிய குர்ஆன் வசனங்கள் யூத கிறிஸ்தவர்களுக்கு சாதகமான வசனங்களாகவே பெரும்பான்மையாக இருந்தன.
நீங்கள் என்னதான் செய்தாலும் அற்புதம் செய்துக் காட்டவில்லையென்றால் நாங்கள் உம்மை நம்புவதாக இல்லை என்று ஒரே போடு போட்டார்கள் யூதர்கள். முஹம்மதுவிற்கும், அற்புதங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. கிறிஸ்தவர்களோ, இயேசுவின் சிலுவை மரணம், மற்றும் உயிர்த்தெழுதலோடு ஃபெவிகால் இணைப்பு போன்று ஒட்டிக்கொண்டு இருந்தார்கள், முஹம்மது என்ன செய்தாலும், யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் இவரை நபியாக ஏற்பதாகத் தெரியவில்லை.
சரி, இனி இவர்களுடைய எருசலேமை நோக்கி ஏன் தொழவேண்டும்? “நாட்டமை தீர்ப்பை மாற்றிச்சொல்லுங்க” என்று அல்லாஹ்வை அடிக்கடி வேண்டிக்கொள்ள, இறங்கியது குர்ஆன் 2:144, மாறியது கிப்லா.
கிப்லா பற்றி கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பற்றிய மேலதிக விவரங்கள்:
கேள்வி 388: ஜன்னாஹ் (Jannah) என்றால் என்ன?
பதில் 388 ஜன்னாஹ் என்றால் அரபியில் சொர்க்கம் என்று பொதுவான அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அரபியில் “அல்-ஜன்னா” என்பது தோட்டம் என்றும் பொருள் கூறப்படுகின்றது (ஜன்னத் என்றால் பன்மையாகும்). சொர்க்கத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிக்க அல் ஃபிர்தௌஸ்(al-Firdaus) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
யாருக்கு அல்லாஹ்வின் சொர்க்கம் கிடைக்கும்?
தன் மர்ம உறுப்பையும், நாவையும் காத்துக்கொண்டவர்களுக்கு: புகாரி எண்: 6907
6807. 'தம் இரண்டு கால்களுக்கிடையே உள்ளதான (மர்ம உறுப்பி)ற்கும், தம் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ளதான (நாவி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்காக நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
மனந்திருப்பி, நம்பிக்கைகொண்டு, நல்லவைகளை செய்தால் : 19:60-61
பொறுமையுடன் இருப்பவர்களுக்கு 76:12
நம்பிக்கைகொண்டு, நல்லவைகளை செய்தால் 2:25, 22:23
பயபக்தியுடையவர்கள, தங்கள் கடமைகளைச் செய்பவர்களுக்கு 44:51, 47:15, 52:17
அல்லாஹ்வை தேடுபர்களுக்கு, தொழுபவர்களுக்கு, தானதர்மங்கள் செய்பவர்களுக்கு: 13:22-23
சொர்க்கம் பற்றிய மேலதிக விவரங்களை கீழ்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம்:
கேள்வி 389: ஜஹன்னம் (Jahannam) என்றால் என்ன?
பதில் 389: இஸ்லாமில் ஜஹன்னம் என்றால் நரகம் என்று பொருள். குர்ஆனில் நரகம் பற்றி தோராயமாக 500 வசனங்கள் உள்ளன என்று சொல்லப்படுகின்றது.
இஸ்லாமை நம்பாதவர்கள் தான் நரக நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்: குர்ஆன் 3:10
3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.
நரகத்திற்கு 7 வாசல்கள் இருக்கின்றன, அவைகளில் ஒரு குறிப்பிட்ட வகையான பாவம் செய்தவர்கள் நுழைவார்கள்:
15:43. நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.15:44. அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.
முஹம்மதுவின் தாயும் தந்தையும் நரகத்தில் இருப்பார்கள்:
1777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
347. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.
முஹம்மதுவின் பெரிய தந்தை அபூதாலி நரகத்தில்:
360. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், “மறுமை நாளில் அவருக்கு என் பரிந்துரை பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்,) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும்” என்று கூறினார்கள்.
முஸ்லிம்கள் அனைவரும் முதலில் நரகத்திற்குச் செல்வார்கள்:
299. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
. . .(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றுதான் இருக்கும். ஆயினும், அதன் பருமன் என்னவென்று அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப்பிடிக்கும். அவர்களில் தமது (பாவச்) செயலால் (அங்கு) தங்கிவிட்ட இறைநம்பிக்கையாளரும் இருப்பார். இன்னும் அவர்களில் தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்படுபவரும் இருப்பார். இறுதியாக இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதிகூறியவர்களில், தான் கருணைகாட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். வானவர்கள் நரகத்திலிருக்கும் அவர்களை சஜ்தாவின் அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். மனிதனி(ன் உடலி)ல் உள்ள சஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப் பகுதிகளை நரகம் தீண்டுகிறது. சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆகவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.. .
கேள்வி 390: ஷஹதா (Shahadah) என்றால் என்ன?
பதில் 390: ஷஹதா என்றால் இஸ்லாமிய விசுவாச அறிக்கையாகும் அல்லது இஸ்லாமிய சாட்சியம் கூறுவதாகும்.
இஸ்லாமிய ஷஹதா: ஒருவர் முஸ்லிமாக மாறும்போது இந்த கீழ்கண்ட சாட்சியம் கூறவேண்டும்:
தமிழ்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்.
அரபியில்: Ashhadu an la ilaha illa 'llah; ashhadu anna Muhammadan rasulu 'llah
ஆங்கிலத்தில்: I witness that there is no god but Allah, and Muhammad is the messenger of Allah.
ஷியா முஸ்லிம்கள், தங்கள் விசுவாச அறிக்கையில் கீழ்கண்ட வரியையும் அதிக படியாக சேர்த்துக்கொள்வார்கள்:
அரபியில்: lā sayf ʾillā Ḏū l-Fiqār (லா ஸைஃப் இல்லா துல் ஃபிகார்)
தமிழ்: துல் ஃபிகார்போல வாள் இல்லை
துல் ஃபிகார் என்பது முஹம்மதுவின் மருமகன் அலி அவர்கள் பயன்படுத்திய வாளின் பெயர் ஆகும்.
குர்ஆனில் எந்த ஒரு வசனத்திலும் முழு ஷஹதா காணப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அவை மூன்று வசனங்களிலிருந்து முஸ்லிம்கள் எடுத்துள்ளார்கள்.
குர்ஆன் 37:35-36:
37:35. “அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர். 37:36. “ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
குர்ஆன் 47:19:
47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக – அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
குர்ஆன் 48:29:
48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; . . .
தேதி: 24th Jun 2020
Recent Posts
See Allஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, ” gentilis ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “நாடு அல்லது ஒரே இனத்தைச்...
Comments