top of page

சுலைமான் (சாலமோன்) ராஜா ஒரு முஸ்லிமா?





மன்னன் சுலைமான் அவர்களைப் பற்றி நான் 2 நாளாகமம் 2ம் அத்தியாயத்தில் படித்துக்கொண்டு இருந்தேன். இந்த சுலைமான் நபியைத் தான் என் முஸ்லிம் நண்பர்கள் “அவர் ஒரு முஸ்லிம் நபி” என்று  சொல்கிறார்கள்.


இந்த அத்தியாயத்தில் படிக்கும் போது, சுலைமான் தன் இறைவனுக்கு (யெகோவா)  கனத்தைக் கொடுக்கும்படியாக ஒரு ஆலயத்தை கட்ட ஆயத்தப்படுவதாக வருகிறது (2 நாளாகமம் 2:1). சுலைமான் ஒரு முஸ்லீம் என்று நீங்கள்(முஸ்லிம் நண்பர்கள்) கூறுவதால், அந்த ஆலயத்தை அல்லாஹ்விற்காகத் தானே அவர் கட்டி இருந்திருப்பார்? நான் சொல்வது சரி தானே!


இறைவனுடைய ஆலயம் பற்றி சுலைமான் எப்படி விவரிக்கின்றார் என்பதை பாருங்கள்:


இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன் (2 நாளாகமம் 2:4).


சுலைமான் அரசனின் மேற்கண்ட வார்த்தைகள் இஸ்லாத்தை விவரிகின்ற மாதிரி உள்ளதா? முஸ்லீம் தீர்க்கதரிசியான சுலைமான் இஸ்லாத்தை மேற்கண்ட விதமாக‌ கடைபிடித்தாரா? 


இஸ்லாமிய தொழுகையில் தேவ சமூகத்து அப்பங்கள் உண்டா?

இஸ்லாமில் இறைவனுடைய‌ சந்நிதியில் எப்போதும் வைக்கப்படவேண்டிய ரொட்டிகள் (சமுகத்தப்பங்க‌ள்) அல்லது சுகந்த வர்க்கங்கள் கொண்டு தூபம் காட்டுதல் மேலும் சனிக்கிழமை என்ற நாளை விசேஷித்த விதமாக ஆசரிப்பது போன்றவைகள் உண்டா? இவைகளின்  முக்கியத்துவம் என்ன? இவை அனைத்தும் அல்லாஹ்வுக்காக செய்யப்பட்டதா? சுலைமான் அரசர் செய்த இவைகள் அனைத்தும் எனக்கு இஸ்லாமுக்கு சம்மந்தப்பட்ட வழிபாடுகள் போன்று தெரியவில்லையே!


சுலைமான் செய்தவைகள் அனைத்தும் எங்கள் இஸ்லாமின் வழிபாடுகள் என்று நீங்கள் சொல்வீர்களானால், சுலைமானின் காலத்திற்கு பிறகு எப்போது இவைகளை அல்லாஹ் மாற்றினான் என்று சொல்லமுடியுமா? அது மட்டும் அல்ல, இதை என்றென்றும் (இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி) செய்யும்படி அவர் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டார்.

யூதர்களை ஒதுக்கி, இறைவன் அரபியர்களை தெரிவு செய்துக்கொண்டானா?


இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக, சில முஸ்லிம்கள் “யூதர்களை ஒதுக்கி, இறைவன் அரபியர்களை தெரிவு செய்துக்கொண்டான், அதனால் வழிபாடுகளையும் மாற்றினான்” என்று சொல்லக்கூடும். 


சுலைமான் அரசரிடம் யெகோவா தேவன் நேரடியாக பேசியதாக 1 இராஜாக்கள் 6:11-13 வசனங்கள் கூறுகின்றன. வேறு ஒரு தூதர் மூலமாகவோ அல்லது மத்தியஸ்தர் மூலமாகவோ அல்லாமல், நேரடியாக பேசியதாக வசனங்கள் கூறுகின்றன. அவர் “என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.” என்று சுலைமானிடம் கூறினார். சுலைமானிடம் பேசியது அல்லாஹ் என்றால், ஏன் தன் நபியிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளை அல்லாஹ் பேசுகின்றான்? அதே அல்லாஹ், 1600 ஆண்டுகளுக்கு பிறகு இன்னொரு முஸ்லிம் நபி (முஹம்மது) மூலமாக. யூதர்கள் பன்றிகள் என்று பேசியுள்ளான். சுலைமானிடம் பேசும் போது மட்டும், நான் இஸ்ரவேலை கைவிடாதிருப்பேன் என்றுச் சொன்னார், முஹம்மதுவிடம் மட்டும், அவர்கள் பன்றிகள் என்று ஏன் கூறுகின்றான் அல்லாஹ்? அல்லாஹ் தன் மனதை எப்போது மாற்றிக்கொண்டான்?


மேலும் பார்ப்போம்…


சுலைமான் அரசர் எப்படி தொழுதுக்கொண்டார் என்று கவனியுங்கள். 


1 இராஜாக்கள் : 8:22-23


22 பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:


23 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை, தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.


மேலும் 54ம் வசனத்தில்: . . . அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததைவிட்டெழுந்து,. ..  என்று சொல்லப்பட்டுள்ளது


முஸ்லிம்கள் இப்படித்தான் தொழுதுக்கொள்கிறார்களா? ஜெபிக்கிறார்களா? சுலைமான் முழங்கால் படியிட்டு, வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி தொழுதுக்கொண்டார். இது போல முஸ்லிம்கள் அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறார்களா? ஒருவேளை, முஸ்லிம்கள் தொழுதுக்கொள்ளும் முறையை அல்லாஹ் மாற்றிவிட்டானா?


ஆம், அல்லாஹ் மாற்றினான் என்றுச் சொன்னால், எப்போது மாற்றினான்? சுலைமான் காலத்திலிருந்து எப்படி தொழுதுக்கொள்ளவேண்டும் என்று முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டதாக குர்‍ஆனிலிருந்து முஸ்லிம்கள் சான்றுகளை வசனங்களை காட்டமுடியுமா?


இறுதியாக, சுலைமான் கட்டிய‌ ஆலயத்தில் நடந்த வழிபாட்டின் காட்சி இதுதான்.


12. ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.


13. அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.


14. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று. (II நாளாகமம் 5:12-14)


மேற்கண்ட வசனங்களில் தொழுதுக்கொள்கின்ற அனைவரும் அல்லாஹ்வையா தொழுதுக் கொண்டிருக்கிறார்கள்? இசைக்கலைஞர்கள், பாடகர்கள் இசைக்கருவிகளைக் கொண்டு பாடிக்கொண்டு தொழுதுக்கொண்டு இருக்கிறார்கள். இப்படித் தான் இன்று முஸ்லிம்கள் தங்கள் மசூதிகளில் அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறார்களா? அதாவது பல இசைக்கருவிகளை மீட்டி, பாடிக்கொண்டு தொழுதுக்கொள்கிறார்களா? பாடல் பாடிக்கொண்டும், இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டும் பாடி தன்னை தொழுதுக்கொள்வதை, எந்த காலத்திலிருந்து அல்லாஹ் மாற்றிவிட்டான்? இசையோடு தன்னை தொழுதுக்கொள்வதை எப்போது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு தடை செய்தான்?


ஆங்கில மூலம்: http://www.faithbrowser.com/was-king-solomon-a-muslim/

 
0 views0 comments

Comments


bottom of page