top of page

பர்னபா சுவிசேஷம் குர்-ஆனோடும் & இஸ்லாமோடும் மோதவில்லை என்று நிருபிப்பவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம



பர்னபா என்பவர் மஸீஹா ஈஸாவின் சீடர் என்றும், ‘பர்னபா சுவிசேஷம்’ என்ற பெயரில் உள்ள நூல் தான்  ‘ஈஸா பற்றிய உண்மையான விவரங்களைச் சொல்லும் இன்ஜில்’ என்றும் முஸ்லிம்கள் வாதிடுகிறார்கள்,  தங்கள் தளங்களிலும், குர்-ஆன் தமிழாக்கத்திலும் எழுதிவருகிறார்கள்.


எனவே, தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், இந்த சவால் அவர்களுக்கு முன்பாக வைக்கப்படுகின்றது. பர்னபா சுவிசேஷம் என்ற நூல் குர்-ஆனோடு மோதவில்லை என்று நிருபிப்பவர்களுக்கு இந்திய ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும்.


இந்த சவாலை ஏற்க விரும்புபவர்களுக்கான நிபந்தனைகள்:


நிபந்தனைகள்: 


1) இந்த போட்டியில் கலந்துக்கொள்பவர் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும் (குர்-ஆனையும்,  ஆதாரபூர்வமான சன்னி ஹதீஸ்களை (6) நம்புபவராக இருக்கவேண்டும்).


2) குர்-ஆனை தமிழில் அல்லது தன் தாய் மொழியில் அல்லது தனக்கு புரியும் மொழியில் படித்து, புரிந்துக்கொள்பவராக இருக்கவேண்டும். அரபி மொழி புரியாமல் குர்-ஆனை அரபியில் மட்டும் படிப்பவர் இப்போட்டியில் கலந்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவரால் இஸ்லாமை சரியாக புரிந்துக் கொள்ளமுடியாது.  


3) தனக்கு புரியும் மொழியில் அல்லது தமிழில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் நம்பும் 6 ஹதீஸ் தொகுப்புக்களை படித்து புரிந்துக்கொள்பவராக இருக்கவேண்டும்.


4) பர்னபா சுவிசேஷம் என்ற நூல் இதுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.  அது ஆங்கிலத்தில் நமக்கு இணையத்தில் கிடைப்பதால், ஆங்கிலம் படித்து புரிந்துக்கொள்பவராக  அவர் இருக்கவேண்டும், அல்லது ஆங்கிலத்தில் படித்து, அதனை அவருக்கு விளக்கும் உதவியாளரோ அல்லது நண்பரோ அருவருக்கு இருக்கவேண்டும்.


5) பர்னபா சுவிசேஷத்தில் 222 அத்தியாயங்கள் உள்ளன. அவைகளை இப்போட்டியில் கலந்துக்கொள்பவர் படித்து, அதில் உள்ள எந்த ஒரு விவரமும் குர்-ஆனோடும், ஆதாரபூர்வமான சன்னி பிரிவு ஹதீஸ்களாகிய புகாரி, முஸ்லீம் போன்ற ஹதீஸ்களோடும் மோதவில்லை என்று ஆதாரங்களோடு விளக்கவேண்டும்.


6) இப்போட்டியாளருக்கு உதவியாக இருக்கும் வண்ணமாக, நம் சகோதரர்  வெங்கடேசன் அவர்கள் ஒரு வீடியோவில் பர்னபா சுவிசேஷம் எப்படி குர்-ஆனோடு மோதுகின்றது என்பதை சுருக்கமாக சில முக்கியமான பாயிண்டுகளை கொடுத்துள்ளார் – அதன் தொடுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது – www.youtube.com/watch;  (குர்ஆன் வசனங்களை பொய்யாக்கிய பர்னபா சுவிசேஷம்). இந்த போட்டியாளர், இந்த வீடியோவையும் பார்த்து தன் மறுப்பையும்  தெரிவிக்கலாம்.  


7) மேலும், இப்போட்டியாளருக்கு உதவும் வகையில் எழுத்துவடிவில் பர்னபா சுவிசேஷம் எப்படி குர்-ஆனோடு மோதுகின்றது என்பதை கட்டுரைகளாக நான் எழுதியுள்ளேன். அவைகளை இங்கு படிக்கவும். இக்கட்டுரைகள் போட்டியாளருக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுக்கும், முக்கியமாக – “பர்னபா சுவிசேஷம் – 9: குர்-ஆனோடு நேரடியாக மோதும் ஒரு மோசடி ஆவணம்” என்ற கட்டுரையை படிக்கவும்.


8) போட்டியாளர் தன் ஆய்வின் விவரங்களை எழுத்துவடிவிலோ, ஆடியோ அல்லது வீடியோ வடிவிலோ பதில் அளிக்கலாம். 



a. தன் பேஸ்புக்கில் பதில்களை கொடுக்கலாம், அல்லது 


b. எனக்கு மெயில் மூலமாக (isa.koran@gmail.com) பதில்களை அனுப்பலாம் அல்லது 


c. இந்த தொடுப்பின் மூலமாக (https://www.answeringislam.org/tamil/contactus.html) தன் பதில்களை அனுப்பலாம், அல்லது


d. என் பிளாக்கரில் பின்னூட்டம் இடலாம் (http://isakoran.blogspot.com)


9) எனக்கு வரும் பதில்களுக்கு நான் ஆய்வு செய்து என் மறுப்பையும், கேள்விகளையும் முன்வைப்பேன், அவைகளுக்கும் போட்டியாளர் பதில் கொடுக்கவேண்டும். பர்னபா சுவிசேஷத்தின் 222 அத்தியாயங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, போட்டியாளர் தன் பதிலை கொடுக்கவேண்டும். மேலேகொடுக்கப்பட்ட வீடியோ அல்லது என் கட்டுரைகளில் கேட்கப்பட்ட கேள்விகள், பர்னபா சுவிசேஷத்தின் ஒரு பகுதி ஆகுமே தவிர, அவைகள் முழுவதுமான விவரங்கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே, பர்னபா சுவிசேஷத்தின் 222 அத்தியாயங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.


10) கவனிக்கவும், குர்-ஆனும், சன்னி பிரிவினரின் 6 ஹதீஸ் தொகுப்புக்களும் தான் இஸலாமின் ஆதாரமாக கொள்ளவேண்டுமே ஒழிய, இதர இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படாது.


11) பர்னபா சுவிசேஷத்தின் 222 அத்தியாயங்கள் அனைத்திலும்  குர்-ஆனோடு மோதும் எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லையென்று ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டால், “ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்” தளத்தின் ஆசிரியர் குழுவின் சார்பாக ஒரு லட்சம் இந்திய ரூபாய்கள் பரிசாக வழங்கப்படும்.


12) கடைசியாக, இயேசுவின் உண்மையான சீடர்களில் பர்னபாவும் ஒருவர் என்று போட்டியாளர் சரித்திரத்தின் உதவியோடு நிரூபிக்கவேண்டும்.


பீஜே அவர்களுக்கு மட்டும் இரண்டு லட்சம் பரிசு:


ஒருவேளை, குர்-ஆன் தமிழாக்கத்தை செய்த திரு பி. ஜைனுல் ஆபீதின் அவர்கள் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, இந்த போட்டியில் பங்கு பெற்று, வெற்றிப்பெற்றால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் நிர்வாகியாகிய நான் (உமர்), போனஸாக இன்னொரு லட்சம் ரூபாயைச் சேர்த்து, மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய்களை அவருக்கு, மக்களின் முன்னிலையில் பொது மேடையில் அவருக்கு பரிசு வழங்குவேன்.  (இந்த போட்டியில் பீஜே அவர்கள் பொய் ஐடிக்களை [ஃபேக் ஐடிக்களை] பயன்படுத்தக்கூடாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).


ஏன் இவருக்கு மட்டும் இந்த அதிகபடியான போனஸ் தொகை?


ஏனென்றால், பீஜே அவர்கள் தம்முடைய குர்-ஆன் மொழியாக்கத்தில் பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் தான் இயேசுவின் உண்மையான சீடர் என்று எழுதியுள்ளார், அந்த நூலில் எழுதப்பட்டுள்ள விவரங்கள் தான் உண்மை என்றும் அவர் எழுதியுள்ளதால், அவருக்கு விசேஷித்த கவனிப்பு தேவைப்படுகின்றது.


தமிழ் முஸ்லிம்கள் மட்டுமல்ல, உலகில் எந்த மொழியை பேசும் முஸ்லிமாக இருந்தாலும் சரி, இந்த போட்டியில் கலந்துக்கொள்ளலாம். 


முஸ்லிம்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பு:


தமிழ் முஸ்லிம்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பு இது, இதனை அவர்கள் தவறவிட்டுவிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 


“சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” (குர்-ஆன் 17:81)  


என்ற குர்-ஆன் வசனத்தை நம்பும் முஸ்லிம்களுக்கு, சத்தியம் பற்றி சாட்சி கொடுக்க கிடைத்த ஒரு அறிய வாய்ப்பு இது. ஒருவேளை, உங்களின் ஆய்வும் பதில்களும் வெற்றி பெற்றால்,  அல்லாஹ் இறக்கிய உண்மையான இன்ஜிலை அடையாளப்படுத்திய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும், அல்லாஹ்வும் மகிழுவான்.  


1) ஏன் நீங்கள் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளக்கூடாது? 


2) ஏன் பீஜே அவர்கள் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு இரண்டு லட்சங்கள் பரிசு பெறக்கூடாது? 


3) பீஜே அவர்களின் குர்-ஆன் தமிழாக்கத்தை படிக்கும் முஸ்லிம்கள் ஏன் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளக்கூடாது?


இப்படிக்கு,



ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் ஆசிரியர் குழு

0 views0 comments

コメント


bottom of page