top of page

முஸ்லிம்கள் நித்திய ஜீவனைப்பெற என்ன செய்யவேண்டும்?



நித்திய ஜீவனை பெற நான் என்ன செய்யவேண்டும்? இந்த கேள்வியை ஒரு பணக்கார இளைஞன் இயேசுவிடம் கேட்டான் (பார்க்க: மத்தேயு 19: 16-22, மாற்கு 10: 17-22 & லூக்கா 18: 18-23)


அந்த இளைஞனுக்கு இயேசு என்ன பதில் கூறினார்?


. . . நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார் (மத்தேயு 19:17)


குறிப்பு: 'கட்டளை – Law/Commandment' என்ற வார்த்தை பைபிளில் 'கற்பனை' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.


சிலர் முக்கியமாக முஸ்லிம்கள், இந்த உரையாடல் இந்த வசனத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்து, அவர்கள் அடுத்தடுத்த வசனங்களை படிப்பதில்லை.  அதன் பிறகு முஸ்லிம்கள் ஆச்சரியத்துடன் “பார்த்தீர்களா? நித்திய ஜீவனில் பிரவேசிக்க இயேசு கட்டளைகளுக்கு கீழ்படியவேண்டும்” என்றுச் சொல்கிறார் என்று நம்மிடம் கூறுவார்கள்.


ஆனால், அந்த உரையாடல், அதோடு நின்றுவிடவில்லை, மேற்கொண்டு படித்தால் தான் அந்த இளைஞன் என்ன பதில் கூறினான், அதற்கு இயேசு மறுபடியும் என்ன பதில்  அளித்தார் என்று புரியும். 


அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான் (மத்தேயு 19:20)


என்ன ஆச்சரியம்! அந்த  இளைஞன் அனைத்து  கட்டளைகளையும் கைகொண்டு இருப்பதாக கூறுகின்றானே! இதனால் நித்திய ஜீவனுக்கு போகும்படியான தகுதி அவனுக்கு முழுவதுமாக இருப்பதாக நாம் கருதலாம் அல்லவா?


அந்த வாலிபனின் பதிலுக்கு இயேசு என்ன உத்தரவு கொடுத்தார்?  


ஓ, நீ அனைத்து கட்டளைகளையும் பின்பற்றினபடியினால் உனக்கு நித்திய ஜீவன் நிச்சயம் உண்டு, நீ கலங்காதே, திகையாதே” என்றுச் சொன்னாரா? 


அல்லது 


இயேசு தம் சீடர்களைப் பார்த்து, “பார்த்தீர்களா, இந்த வாலிபன் நித்திய ஜீவனுக்கு போகும்படியான தகுதியை பெற்று இருக்கிறான்” என்றுச்  சொன்னாரா?  


இரண்டு பதில்களையும் இயேசு கூறவில்லை. ஆனால் அதற்கு பதிலாக கீழ்கண்டவாறு கூறினார்:


இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். (லூக்கா 18:22)


என்ன இது? ஒரு மனிதன் கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்தாலும், அவனிடம் இன்னும் குறை இருக்குமா?  


இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு மனிதன் எல்லா  கட்டளைகளை பின்பற்றினாலும் அது நித்திய ஜீவனுக்கு போவதற்கு போதாது என்பதாகும்.


ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், எந்த ஒரு மனிதனாலும் எல்லா கட்டளைகளையும் முழுவதுமாக எல்லா காலங்களிலும்  கடைபிடிக்கமுடியாது என்பது தான். நான் எல்லா  கட்டளைகளையும் சிறுவயது தொடங்கி பின்பற்றுகிறேன் என்று அந்த இளைஞன் சொன்னதே ஒரு அறியாமை ஆகும். அந்த இளைஞனின் அறியாமையை இயேசு கண்டார். இருந்த போதிலும் அவர் அவனை கடிந்துக் கொள்ளவில்லை.


இதைப் பற்றி மாற்கு 18:21ல் சொல்லும்போது, “இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து” என்று அழகாக சொல்லப்பட்டுள்ளது.


இன்று ஒவ்வொரு மதமும் குறையுள்ள மனிதர்களை எப்படி பார்க்கிறது? மதங்கள் மனிதனை தண்டிக்கிறது, அவர்களை கடிந்துக்கொள்கிறது. ஆனால், இயேசு இவ்விரண்டையும் செய்யவில்லை, அவர் அந்த இளைஞன் மீது  அன்பு செலுத்தினார். 


சரி, மையக்கருத்துக்கு வருவோம்.


அந்த இளைஞனிடம் இருந்த ஒரு குறை என்ன? அவன் இன்னும் அதிகமாக கீழ்படிய வேண்டுமா? அல்லது இன்னும் நல்ல செயல்களைச் செய்யவேண்டுமா? – இல்லை.


இயேசு அந்த இளைஞனுக்கு கூறிய அந்த ஒரு காரியம் என்ன தெரியுமா?




. . .என்னைப் பின்பற்றிவா என்றார்.” (மத்தேயு 19:21, மாற்கு 10:21, லூக்கா 18:22)


கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்து கீழ்படிவது நல்லது  தான், ஆனால் அந்த ஒரு செயல் நமக்கு நித்திய ஜீவனை கொடுக்க போதாது.  நல்ல செயல்களைச் செய்வதும் நல்லது தான், ஆனால் நித்திய ஜீவனை அது சம்பாதித்து நமக்கு கொடுக்காது. அந்த வாலிபன்,  ஒருவேளை தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்தாலும், அது  போதாது, இன்னும் ஒரு காரியம் குறைவாக உள்ளது.


உலக மக்களுக்கு  நித்திய ஜீவனை கொடுக்கின்ற அந்த ஒரு காரியம் என்னவென்றால், “இயேசுவை பின் தொடர்வது தான்“. ஏனென்றால், அவர் தான் நித்திய ஜீவனை கொடுப்பவர்.


என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (யோவான் 10:27, 28)


இயேசு தான் நித்திய ஜீவனைக் கொடுக்கின்றவர். ஒரு வேளை நீங்கள் உங்கள் வாலிப வயதிலிருந்து அனைத்து நல்ல கட்டளைகளை பின்பற்றுகிறவராக இருக்கலாம், ஆனால் இயேசுவை நீங்கள் பின்பற்றவில்லையென்றால், நித்திய ஜீவனை பெறும்படியான தகுதியை இழந்து விடுகின்றவர்களாக மாறிவிடுவீர்கள்.


இயேசுவை பின்பற்ற முடிவு செய்யுங்கள். அவரிடம் இப்பொழுதே உள்ளத்தில் பேசுங்கள், நான் உங்களை பின்பற்ற விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள்.  உங்களின் இந்த ஜெபத்தை அவர் நிச்சயம் கேட்பார், அவர் தனக்கே உரித்தான ஆச்சரியமான முறையில் உங்களுக்கு பதிலும் கொடுப்பார். இயேசுவின் ஆரம்பகால சீடர்களில் ஒருவர் இயேசு கொடுத்த ஒரு வாக்குறுதியை கீழ்கண்டவாறு கூறுகிறார்:


நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.  (1 யோவான் 2:15)


இந்த வாக்குறுதியை நம்பி, 'இயேசுவை பின்பற்றுவேன்' என்றுச் சொல்லி, அவரை உண்மையாக பின்பற்றுகிறவர்களுக்கு நித்திய ஜீவன் நிச்சயம் உண்டு. 

அடிக்குறிப்பு:

[1] நித்திய ஜீவன்: மரணத்திற்கு பிறகு நித்திய நித்தியமாக இறைவனோடு வாழும் வாழ்க்கை 

தேதி: 26th Feb 2020

 
1 view0 comments

Comments


bottom of page