top of page

ரமலான் சிந்தனைகள் – 2: ரமலான் நோன்பு – அறிந்ததும் அறியாததும்



உலகமெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் ரமலான் மாதத்தின் நோன்பு (உபவாசம்) இருப்பது நாமறிந்தது. அவர்களைப் பொறுத்தவரையில், நோன்பு அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஒரு மதச் சடங்கு, இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் ஒன்று. நோன்பு அனைவருக்கும் விதிக்கப்பட்டது என்றாலும், நோயாளிகள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு விலக்கு கொடுக்கப்படுகிறது. சூரியோதய நேரத்திலிருந்து அஸ்தமனம் ஆகும் வரைக்கும் முஸ்லீம்கள் நோன்பு இருக்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் இப்தார் உணவுடன் நோன்பை முடித்துக் கொண்டு, பின்னர் மறுநாள் சூரிய உதயம் வரை அவர்கள் விரும்பும் சத்தான ஆகாரத்தை சாப்பிடலாம். முஹம்மது அவர்களுக்கு குர்-ஆன் ரமலான் மாதத்தில் வெளிப்பட்டதால், நோன்பு விதிக்கப்பட்டிருப்பதாக முஸ்லீம்கள் கூறினாலும், ரமலான்  மாதத்தில் அவர்கள் கடைபிடிக்கும் நோன்பு பழக்க வழக்கங்கள் முஹம்மதுவின் காலத்திற்கு முன்பே இருந்து வந்த பழக்கம். ரமலான் மாதம் நன்றாக ஓய்வெடுத்து, உடல் நல ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முஹம்மதுவின் முன்னோர்கள் ஆசரித்து வந்தனர். அக்காலத்தில் போர், வன்முறை போன்றவைகளுக்கு அனுமதி கிடையாது.


கிறிஸ்தவர்களாகிய நமக்கு உபவாசம் கட்டாயம் கிடையாது. ஆனால் ஆன்மீக வாழ்க்கையின் நலனுக்காக, இறை நெருக்கத்திற்காக பலரும் தன்னார்வத்துடன் வருடத்தில் தேவ ஏவுதல் மற்றும் நடத்துதலின் படி உபவாசம் இருக்க ஒப்புக் கொடுத்து ஜெபிக்கின்றனர். ஆயினும் கிறிஸ்தவ உபவாசத்தில் தேவனுடன் உள்ள உறவின் நெருக்கமும், பெருக்கமுமே முதல் நோக்கமாக இருக்கிறது. மற்றவர்கள் காணும்படி உபவாசிப்பதைவிட, அவரவர் தன் வீட்டில் தேவனுடன் இருக்க வேண்டும் என வேதம்  போதிக்கிறது. உபவாசித்து தேவனுடன் தனித்திருந்த வேதமாந்தர்கள் அனேகர். அனேக உபவாசக் கூட்டங்களுக்கு விரும்பிச் செல்லும் பலர், தனித்திருந்து உபவாசிக்கும் அனுபவம் இல்லாதிருக்கிறார்கள். நம் ஆண்டவர் நாற்பது நாள் வனாந்திரத்தில் தனித்திருந்து உபவாசித்தார் என்பது எவ்வளவு முன்னுதாரணமானது பாருங்கள். உப வாசம் என்பது தேவனுடன் வாசம் செய்யும் ஒரு நேரம். இந்நாட்களில், ஒரு நாளாவது உபவாசித்து முஸ்லீம்கள் இயேசுவைக் கண்டுகொள்ள ஜெபிப்போம். இது ஒரு ஆலோசனை – கட்டாயமல்ல.


ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் நோன்பிருக்கும் முஸ்லீம்களின் குடும்பச் செலவு குறைந்தது 30 சதவீதம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

-அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 25th April 2020

 
0 views0 comments

Comments


bottom of page